நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்வே உண்மையான சொர்கம். மனதில் உறுதி இருந்தால், உடலில் தெம்பு இருந்தால் எதையும் சாதிக்க முடியும். ஆரோக்கியமான உடல் உங்களுக்கு நிகரில்லா நம்பிக்கையை கொடுக்கும். எனவே எப்போதும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பல நோய்த்தொற்றுகளின் அபாயத்தை குறைக்கலாம். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய பதிவில் நோய் எதற்கு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஒரு அற்புத டீயை பற்றி பார்க்க போகிறோம். இதில் பயன்படுத்தப்படும் இஞ்சி மற்றும் பூண்டில் பல மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இஞ்சி பூண்டு டீயின் செய்முறை மற்றும் அதன் நன்மைகளை இன்றைய பதிவில் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!
இந்த டீயை காலையில் குடிப்பது கூடுதல் சிறப்பு. இதை காலை உணவிற்கு முன்பு எடுத்துக் கொள்ளலாம். இதன் ஆரோக்கிய நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணரான ஜெயா ஜோஹ்ரி அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்…
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன. மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் அண்டாமல் உடலை பாதுகாக்கின்றன
பூண்டில் நிறைந்துள்ள சல்ஃபர் தொற்று நோயை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் அதில் உள்ள ஆன்டி வைரல் பண்புகள் சளி மற்றும் இருமலிலிருந்து விடுபட உதவுகின்றன.
இஞ்சி பூண்டு டீ குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமின்றி உடல் எடையையும் குறைக்க உதவுகிறது. இஞ்சி மற்றும் பூண்டு இவ்விரண்டும் செரிமான மண்டலத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றன. இந்தக் கலவையானது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. இது எடை இழப்பை சுலபமாக்குகிறது.
இஞ்சி பூண்டு டீ குடிப்பது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனை குடித்து வர குடல் இயக்கம் எளிதாகும். இந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமானம் சார்ந்த பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்
இஞ்சி மற்றும் பூண்டில் நிறைந்துள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் சுவாச பிரச்சனைகளை குணப்படுத்துகின்றன. இது தொண்டை வலி, நெஞ்சு சளி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் தரும். மேலும் இதை குடித்து வர சளி பிடிப்பதையும் தடுக்கலாம்.
இஞ்சி மற்றும் பூண்டை கொண்ட தயாரிக்கப்படும் இந்த டீ இயற்கையானது இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இந்த டீயை உங்களுடைய தினசரி வழக்கத்தில் சிரித்துக் கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: 40 வயதிலும் 20 வயது போல் தோற்றம் பெற உதவும் அற்புத யோகாசனம் !
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]