herzindagi
look younger yoga reduce wrinkle and double chin

Look Younger Yoga : 40 வயதிலும் 20 வயது போல் தோற்றம் பெற உதவும் அற்புத யோகாசனம் !

இளமையாக இருக்க யோகா : முக சுருக்கம், கருவளையம் நீங்கி இளமையாக மாறனுமா? செயற்கையான அழகு சாதன பொருட்களுக்கு பதிலாக, நிரந்தர பலன் தரும் இந்த இயற்கை முறையை பின்பற்றி பயன்பெறுங்கள்…
Editorial
Updated:- 2023-09-25, 10:57 IST

வயது கூடும் பொழுது, முகச்சுறுக்கங்கள் கருவளையம் மெல்லிய கோடுகள் போன்ற சரும பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை, குறைந்த உடல் செயல்பாடு, நாள்பட்ட உடல்நல பிரச்சனைகள், மன அழுத்தம், மாசு போன்ற பல காரணங்களால் சருமத்தின் இயற்கையான ஈரத்தன்மை குறைய தொடங்குகிறது. இது சரும வறட்சிக்கு வழிவகுக்கிறது.

முகச்சுறுக்கங்களால் முகத்தின் அழகு பாதிக்கப்படுகிறது. இந்த சூழலில் நம்மை நாமே கவனித்துக் கொண்டால் அழகை நீண்ட காலத்திற்கு பராமரிக்க முடியும். இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள ஒரு யோகா பயிற்சியை நீங்கள் தினமும் பயிற்சி செய்து வந்தால் வயதான தோற்றத்தை தடுக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்:  நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!

"கபோல் தௌதி கிரியா" யோகா பற்றிய விவரங்களை இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த முக மசாஜ் யோகா உங்களுடைய முக தசைகளில் வேலை செய்கிறது மற்றும் முகத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. முகத்திற்கு இயற்கை பிரகாசத்தை கொடுக்கும் இந்த அற்புத பயிற்சி குறித்த விவரங்களை யோகா நிபுணரான ஹரிதா அகர்வால் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இளமையாக இருக்க யோகா

கபோல் தௌதி கிரியா : முகப்பரு மற்றும் சுருக்கங்களை நீக்கிப் பொலிவிழந்த சருமத்தை புத்துயிர் பெற செய்யும் அற்புத யோகா பயிற்சி இது. இந்த பயிற்சியானது கன்னங்களின் தசைகளையும் வலுப்படுத்துகிறது.

கபோல் தௌதி கிரியா செய்முறை

look younger yoga pranayama

  • இந்த பயிற்சி செய்வதற்கு முதலில் நேராக நிமிர்ந்து உட்காரவும்.
  • விரல்களை ஒன்றாக சேர்த்து வைக்கவும், பின் விரல்களை அழுத்தவும்.
  • ஆழமாக மூச்சு விடுங்கள்.
  • பின் உங்களுடைய கட்டை விரலால் மூக்கை மூடவும்.
  • வாயில் காற்றை நிரப்பி, கீழ் தாடை பகுதியை கழுத்துக்கு அருகில் கொண்டு வரவும்.
  • உங்களால் முடிந்தவரை இந்த நிலையில் இருக்கலாம். இந்த பயிற்சியை தினமும் மூன்று முறை செய்யவும்.

கபோல் தௌதி கிரியா நன்மைகள் 

look younger yoga reduce double chin

இந்த பயிற்சியானது பின்வரும் அழகு சார்ந்த பிரச்சனைகளை நீக்குகிறது.

  • டபுள் சின்
  • மெல்லிய கோடுகள்
  • நெற்றி சுருக்கங்கள்
  • கருவளையம் 
  • பருக்கள்

மற்ற நன்மைகள்

  • மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
  • தூக்கமின்மையை போக்கும்
  • மூளை மற்றும் மனதை அமைதிப்படுத்துவதற்கான சிறந்த, மலிவான மற்றும் பயனுள்ள வழி.
  • நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, மனநிம்மதியை கொடுக்கும்.
  • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
  • தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
  • இது மனதை அமைதிப்படுத்தி இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 5 விஷயங்களை செய்தால் போதும், ஒரே வாரத்தில் ஒல்லியாகலாம்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]