herzindagi
neem leaves health benefits

Neem Leaves : தினமும் 2 வேப்பிலையை மென்று சாப்பிட்டால் போதும், வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாக வாழலாம்!

மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்பிலையை தினமும் மென்று சாப்பிட்டு வந்தால் பல உடல் நல பிரச்சனைகளை தடுக்கலாம். இதனால் கிடைக்கக்கூடிய 5 சிறந்த நன்மைகளை இன்றைய பதிவில் பார்க்கலாம்…
Editorial
Updated:- 2023-09-27, 07:00 IST

வேப்பிலை தினமும் சாப்பிடலாமா? மிகவும் புனித மரமாக கருதப்படும் இந்த வேப்பிலையில் வியக்க வைக்கும் பல மருத்துவ நன்மைகள் காணப்படுகின்றன. குடற்புழுக்களை நீக்குவது முதல் கூந்தல் ஆரோக்கியம் வரை வேப்பிலைகளால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம். இந்த இலைகளை தினமும் மென்று சாப்பிட்டு வந்தால் உடலில் பல அற்புத மாற்றங்களை காணலாம்.

 காலம் காலமாக ஆயுர்வேத மருத்துவத்தில் வேப்பிலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாம் வீட்டில் தயாரிக்கும் சீயக்காய் பொடியில் தொடங்கி, தலையில் உள்ள பொடுகை நீக்குவது முதல் நம்முடைய பல தேவைகளுக்காக வேப்பிலைகளை பயன்படுத்துகிறோம். இத்தகைய நற்பண்புகள் நிறைந்த வேப்பிலையை தினமும் மென்று சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு முதிர்ந்த வேப்பிலைகளை சாப்பிட கடினமாக இருந்தால் வேப்பங்கொழுந்தையும் சாப்பிடலாம். 

இந்த பதிவும் உதவலாம்: இரத்தம் ஊற, மலச்சிக்கல் நீங்கி ஆரோக்கியம் பெற பீர்க்கங்காய் சாப்பிடுங்கள்!

மாசு மருவற்ற தெளிவான சருமத்தை பெறலாம்neem leaves medicinal uses

 

வேப்பிலையில் நிறைந்துள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உடம்பில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்க உதவுகின்றன. இவ்வாறு இரத்தத்தை சுத்திகரிப்பதன் மூலம் நல்ல தெளிவான சருமத்தை இயற்கையாகவே பெற முடியும். உங்கள் சருமத்தை உள்ளிருந்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேப்பிலைகளை மென்று சாப்பிடலாம். இது முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது. வேப்பிலையை மென்று சாப்பிட கடினமாக இருந்தால் இதனுடன் சிறிதளவு சுத்தமான தேன் கலந்து சாப்பிடலாம்.

கண் பார்வையை மேம்படுத்தும் 

வேப்பிலையில் உள்ள பண்புகள் கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன ஆயுர்வேதத்தின் படி வேப்பிலைகள் உங்களுடைய கண் பார்வையை மேம்படுத்துகிறது. இதை மென்று சாப்பிட்டு வர கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இதனுடன் கண் சார்ந்த பல நோய்களையும் தடுக்கலாம். கண்களில் ஏற்படும் எரிச்சல் அல்லது சிவத்தல் பிரச்சனையிலிருந்து விடுபட வேம்பு நீரையும் பயன்படுத்தலாம்.

ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்

வேப்பிலையில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கூந்தலுக்கு அதிக நன்மைகளை தருகின்றன. தினமும் இரண்டு வேப்பிலைகளை மென்று சாப்பிட்டு வர கூந்தல் ஆரோக்கியமாக வளரும். இது உச்சந்தலையை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது மற்றும் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. பொடுகு மற்றும் கூந்தல் சேதத்தை தடுக்க வேம்பு நீரைக் கொண்டு தலைமுடியை அலசலாம்.

முத்து போன்ற வெள்ளை பற்களை பெறலாம் 

பல் துலக்க வேப்பங்குச்சிகளை பயன்படுத்துவது அதிக நன்மைகளை தரும். ஒரு சில கிராமப்புறங்களில், இன்றளவும் வேப்பங்குச்சிகளை பயன்படுத்தி வருகின்றனர். வேப்பங்குச்சிகளை போலவே வேப்பிலைகளும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகின்றன. இது பற்களில் ஏற்படும் தொற்றுகளை தடுக்கவும், ஈறு மற்றும் பல் சார்ந்த பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.  இயற்கையாகவே முத்து போன்ற வெள்ளை பற்களைப் பெற வேப்பிலைகளை மென்று சாப்பிடலாம்.

eating neem leaves

நல்ல செரிமானத்திற்கு உதவும்

 உங்கள் செரிமான மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ள தினமும் இரண்டு வேப்பிலைகளை மென்று சாப்பிடலாம். இது கல்லீரலின் செயல் திறனை மேம்படுத்துவதன் மூலம் நல்ல சீரான செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் செரிமான பாதையில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சுவாச பிரச்சனைகளை நீக்கி ஆரோக்கியத்தை காக்கும் இஞ்சி பூண்டு டீ!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]