herzindagi
garlic to lower cholesterol naturally

Garlic to Lower Cholesterol : கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டை உங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை செய்யத் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே நல்ல விளைவுகளை காணலாம்…
Editorial
Updated:- 2023-10-01, 17:32 IST

கொழுப்பைக் குறைக்க பூண்டு  : உடலுக்குக் கொழுப்பு மிகவும் அத்தியாவசியமானது. ஆனால் இதன் அளவுகள் அதிகரிக்கும்போது கடுமையான உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் மெழுகை போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு பொருளாகும். கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகரிக்கும்பொழுது, அவை நரம்புகளில் படிய தொடங்குகின்றன. இதனால் நரம்புகள் அடைப்பட்டு பல தீவிர உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். கொலஸ்ட்ராலை சரியான நேரத்தில் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். 

ஊட்டச்சத்து நிபுணரான பிரியங்கா ஜெய் ஸ்வால் அவர்கள், கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டை பரிந்துரை செய்கிறார். பூண்டை பச்சையாக சாப்பிடுவது கொலஸ்ட்ராலின் அளவுகளை ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்திருக்க உதவும். பூண்டில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரையின் அளவுகள் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளைக் கொடுக்கும். தினமும் ஒரு பல் பூண்டை சாப்பிட்டு வரக் கொலஸ்ட்ராலின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்கலாம். பூண்டை உங்கள் தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்வதற்கான சில எளிய வழிகளை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, இந்த ஒரு ஜூஸ் போதும்!

கொலஸ்ட்ராலை குறைக்க 3 எளிய குறிப்புகள்  

garlic water to lower cholesterol

கொலஸ்ட்ராலை குறைக்க பச்சை பூண்டு மற்றும் தண்ணீர் 

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பச்சை பூண்டை இடித்து ஒரு கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து சாப்பிடலாம். இதை தினமும் காலையில் சாப்பிட்டு வர சிறந்த பலன்களை காண முடியும். பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதாக உணர்ந்தால், இதனை வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது நீர்க்கச் செய்த ஆப்பிள் சிடர் வினிகருடன் எடுத்துக் கொள்ளலாம். 

கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டு டீ 

ஒரு பாத்திரத்தில் இடித்த பூண்டுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி ஆற வைக்கவும். சூடு தணிந்த பிறகு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். 

கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டு மற்றும் தேன் கலவை 

garlic honey to lower cholesterol

கொலஸ்ட்ராலை குறைக்க சிறிய துண்டுகளாக நறுக்கி பூண்டுடன் சில துளி தேன் கலந்து சாப்பிடலாம். இந்த கலவையை பொறுமையாக மென்று முழுங்கவும். இதற்குப் பிறகு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரையும் எடுத்துக் கொள்ளலாம். 

அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வீட்டு வைத்தியத்தை கடைபிடிப்பதற்கு பதிலாக மருத்துவ ஆலோசனையை பெறுவதே சிறந்தது. உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் மருத்துவ நிபுணரை அணுகவும். 

இந்த பதிவும் உதவலாம்: மோமோஸ் சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம், எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க! 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]