herzindagi
image

உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை மிச்சப்படுத்த வேண்டுமா? இந்த எளிய குறிப்புகளை பின்பற்றினால் போதும்

உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள எளிமையான குறிப்புகளை பின்பற்றலாம். இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-08-29, 12:21 IST

சிலரது வீட்டில் மின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதை போன்று தோன்றும். மின்சார பயன்பாடு அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், மின் கட்டணம் மட்டும் எதற்காக அதிகரித்து இருக்கிறது என்ற குழப்பம் பலரிடையே காணப்படுகிறது. ஆனால், நாம் செய்யும் சிறு தவறுகள் கூட அதிக மின் கட்டணத்திற்கு வழிவகுக்கும் என்பது நிதர்சனம்.

மேலும் படிக்க: வீட்டில் பல்லிகள் தொல்லை அதிகமாக இருக்கிறதா? அதனை விரட்ட இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

 

அதன்படி, எப்படி மின் கட்டணத்தை குறைக்கலாம் என்று இணையத்தில் தேடுபவரா நீங்கள்? அப்படி என்றால், இந்தப் பதிவு உங்களுக்கு தான். இதில் இடம்பெற்றுள்ள சில வழிமுறைகளை உங்கள் வீட்டில் மேற்கொள்வதன் மூலம் மின் கட்டணத்தை கணிசமாக குறைக்க முடியும்.

 

எல்.இ.டி பல்புகளை பயன்படுத்தலாம்:

 

நாம் எப்போதும் வழக்கமாக பயன்படுத்தும் சாதாரண பல்புகளை விடுத்து, எல்.இ.டி பல்புகளை பயன்படுத்த தொடங்கலாம். இவை மற்ற பல்புகளை விட விலை சற்று அதிகமாக இருக்கும். ஆனால், மற்ற பல்புகளை விட இவை குறைவான மின்சார பயன்பாடு கொண்டவை. இதன் மூலம் சுமார் 80 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இது போன்ற எல்.இ.டி பல்புகளை பயன்படுத்தி மின் கட்டணத்தை குறைக்கலாம்.

 

ஏ.சி பயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்:

 

இன்றைய சூழலில் பெரும்பாலானவர்களின் வீட்டில் ஏ.சி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதன் பயன்பாடு அறிந்து உபயோகப்படுத்தவில்லை எனில், நமது மின் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்காக ஏ.சி-யின் அளவை 24 டிகிரி என வைத்து பயன்படுத்தலாம். இதன் மூலம் மின்சார பயன்பாட்டை ஆறு முதல் எட்டு சதவீதம் வரை நம்மால் குறைக்க முடியும். மேலும், ஏ.சி பயன்பாட்டில் இருக்கும் போது மின்விசிறியையும் சேர்த்து பயன்படுத்தினால், குளிர்ந்த காற்று அறை முழுவதும் பரவும்.

AC

 

சரியான வீட்டு உபயோக பொருட்களை வாங்கவும்:

 

உங்கள் வீட்டிற்கு வாஷிங் மிஷின், ஏ.சி அல்லது ஃப்ரிட்ஜ் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கும் போது, BEE (Bureau of Energy Efficiency) தரக்குறியீட்டில் 5 நட்சத்திரம் ரேட்டிங் கொண்ட பொருட்களை வாங்கலாம். இவை மற்ற உபகரணங்களை விட விலை அதிகமாக இருந்தாலும், மின்சார பயன்பாடு குறைவாக இருக்கும். இதன் மூலம் உங்கள் மின் கட்டணத்தை கணிசமாக கட்டுப்படுத்த முடியும்.

மேலும் படிக்க:  2 மாத்திரைகள் மட்டும் இருந்தால் போதும்; உங்கள் வீட்டின் பழைய மெத்தையை புதியது போன்று மாற்றலாம்!

 

இயற்கை ஒளியை பயன்படுத்தலாம்:

 

இது இருப்பதிலேயே மிகவும் எளிமையான வழியாகும். அதாவது, பகல் நேரங்களில் கூடுமானவரை சூரிய ஒளியை பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டின் ஜன்னல்களை திறந்து வைப்பது போன்ற சிறிய முயற்சிகள் கூட உங்களுக்கு பணத்தை மிச்சப்படுத்த உதவியாக இருக்கும்.

 

சோலார் முறைக்கு மாறலாம்:

 

நீண்ட நாட்களுக்காக திட்டமிடுபவராக நீங்கள் இருந்தால், உங்கள் வீட்டில் சூரிய ஒளியின் ஆற்றலில் இயங்கக் கூடிய சோலார் பேனல்களை அமைக்கலாம். இதன் விலை தொடக்கத்தில் அதிகமாக இருந்தாலும், பல ஆண்டுகளுக்கு இது லாபம் தரும் ஒன்றாக கருதப்படுகிறது.

Solar panel

 

இது போன்ற வழிமுறைகளில் உங்களுக்கு சாதகமானவற்றை பின்பற்றி, உங்களது வீட்டின் மின் கட்டணத்தை கணிசமாக குறைக்கலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]