பொங்கல் பயணத்தில் குளிர் சார்ந்த பிரச்சனைகளைச் சமாளிக்க எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்கள்

பொங்கல் பயணத்திற்கான நேரம் இது, இந்த கடும் குளிரில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால் சில விஷயங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்
image

பொங்கல் பண்டிகை என்பது குளிர்காலத்தில் வரும் முக்கியமான பண்டிகையாகும், இந்த குளிர்கால பயணம் என்பது மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துச் செல்லும் இனிமையான நாட்களாகும். இந்த குளிர்கால பயணத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய்வாய்ப்படும் அபாயம் உண்டு.இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. குளிர் சூழல் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக நோய்கள் உங்களை விரைவில் சூழ்ந்து கொள்ளலாம். நீங்களும் குளிர்காலத்தில் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தால் சில முக்கியமான குறிப்புகளை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இதனால் உங்கள் ஆரோக்கியத்தைச் சீராக வைத்துக் கொள்ளலாம். ரெயின்போ மருத்துவமனையின் மருத்துவர் விபு கவ்த்ரா இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

குளிர்காலத்தில் பயணம் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • குளிர்காலத்தில் நீங்கள் எங்கு சென்றாலும், எப்போதும் கம்பளி ஆடைகள், கையுறைகள், காலுறைகள், தொப்பிகளை அணியுங்கள், மேலும் இவற்றில் இருக்கும் கூடுதல் பொருட்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள், இதனால் நீங்கள் தேவைப்படும் போதெல்லாம் குளிர்ச்சியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • நீங்கள் பனி அதிகமாக இருக்கும் இடத்திற்குச் செல்கிறீர்கள் என்றால் முதலில் இலக்கை அடைந்த பிறகு, அந்தச் சூழலுக்கு ஏற்ப நேரத்தைக் கொடுங்கள், அதன்பிறகு வெளியில் எங்காவது சுற்றித் திட்டமிடுங்கள். இது உங்கள் உடல் வெப்பநிலையைச் சரிசெய்ய உதவுகிறது மற்றும் நீங்கள் நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்கலாம்.
  • பயணத்தின் போது அவ்வப்போது தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள். தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர் அருந்துவது அவசியம். இல்லையெனில், குளிர்ந்த காலநிலையிலும் நீங்கள் நீரிழப்புக்கு ஆளாகலாம். முடிந்தவரைக் கொதிக்க வைத்த தண்ணீரை வெளியில் எடுத்துச்செல்லுங்கள், வீட்டிலும் சுடுதண்ணீரைக் குடியுங்கள்.
  • நட்ஸ்கள் மற்றும் விதைகளை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள், அவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. அவை உடலுக்கு வெப்பத்தையும் தருகின்றன.
travel trip (1)

Image Credit: Google


  • குளிர்ந்த காலநிலையில் பயணத்தின் போது அடிக்கடி காபி மற்றும் தேநீர் அருந்த நினைக்கிறீர்கள், ஆனால் அதை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும், அது நீரிழப்பு அதிகரிக்கும். இதேபோல் மது அருந்துவதைத் தவிர்க்கவும்.
  • குளிர்காலத்தில் வெளியில் செல்லும் மக்கள் தண்ணீரை பிளாஸ்கில் எடுத்துச் செல்லுங்கள், அதில் நீங்கள் சூடான நீரை வைத்திருக்கலாம். வெந்நீர் குடிப்பதால் உடலை சூடாக வைத்திருப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்துவதுடன், தொற்றுநோய் அபாயமும் குறையும்.

travel trip (2)

Image Credit: Googl

  • குளிர்ந்த காலநிலையில் பயணம் செய்யும் போது, பாதங்கள் குளிர்ச்சியிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு நல்ல பாதணிகளை தேர்வு செய்யவும். கம்பளி காலுறைகளை அணிவதால் கால்களுக்குக் கூடுதல் சூடு கிடைக்கும் , மூட்டு வலி பிரச்சனை இருக்காது. சிறுவர்களுக்குக் கையுறை, காலுறை அணிவித்து வெளியில் கூட்டிச் செல்லுங்கள்.
  • சளி, காய்ச்சல், இருமல், தலைவலி ஆகியவற்றுக்கான மருந்துகளை எப்போதும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு, சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும், அதைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் படிக்க: துர்நாற்றத்துடன் வெளியேறும் வாயு பிரச்சனையால் சிரமப்படுபவர்களுக்கு ஓமம் தரும் தீர்வு


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP