herzindagi
image

குளிர் காலத்தின் காலைப் பொழுதை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் மாற்றுவதற்கான எளிய குறிப்புகள்

குளிர் காலத்தின் காலைப் பொழுதை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் மாற்றுவதற்கான எளிய குறிப்புகளை இந்தப் பதிவில் காணலாம். இதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க முடியும்.
Editorial
Updated:- 2025-11-06, 11:24 IST

குளிர் காலத்தின் அதிகாலை வேளைகளில், போர்வையை இழுத்துக்கொண்டு படுக்கையிலேயே இருக்க வேண்டும் என்ற தோன்றுவது இயல்பு தான். ஆனால், சில பழக்கங்கள் மூலம் அன்றைய தினத்தை உற்சாகத்துடனும், ஆரோக்கியத்துடனும் தொடங்க முடியும். குளிர்கால சோர்வை போக்கி, உங்கள் காலை பொழுதை புத்துணர்ச்சியூட்டுவதற்கான சில எளிய வழிகளை பார்ப்போம்.

மேலும் படிக்க: இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றவும்

 

எலுமிச்சை சாறு கலந்த வெந்நீர் அருந்துங்கள்:

 

அன்றைய தினத்தை ஒரு கிளாஸ் வெந்நீர் மற்றும் எலுமிச்சை சாறுடன் தொடங்குங்கள். இது செரிமானத்திற்கு உதவுகிறது. உடலை நீரேற்றமாக பராமரிக்க துணைபுரிகிறது. மேலும், உங்கள் உடல் இயக்கத்தை விழிப்புடன் இருக்கச் செய்கிறது. இது உடலுக்குள் ஒரு மென்மையான மாற்றத்தை ஊக்குவிக்கிறது.

 

தியானம்:

 

அதிகாலை நேரத்தில் நீங்கள் செய்யக் கூடிய 5 நிமிட தியானம் கூட, உங்கள் மனதை அமைதிப்படுத்தி, அன்றைய நாளுக்கு தேவையான கவனத்தை அதிகரிக்க உதவும். அமைதியான ஆரம்பம் என்பது பரபரப்பான நாளுக்கு சிறந்த அடித்தளம் ஆகும்.

Meditation

 

உடற்பயிற்சியின் அவசியம்:

 

10 நிமிட நடைபயிற்சி அல்லது மிதமான யோகா பயிற்சி கூட உங்கள் ஆற்றலையும், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது, அதனை விழித்திருக்க வேண்டிய நேரம் என்று உங்கள் மூளைக்கு அறிவிக்கப்படுகிறது. சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற இது ஒரு எளிதான வழியாகும்.

மேலும் படிக்க: உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? இந்த 5 தவறுகள் முக்கிய காரணமாக இருக்கலாம்

 

வெதுவெதுப்பான நீரில் குளியல்:

 

சற்று வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, உங்கள் தசைகளை தளர்த்தவும், குளிர் காலத்தில் ஏற்படும் மந்தமான உணர்வை எதிர்த்து போராடவும் உதவுகிறது. இதன் வாயிலாக உடனடியாக ஒரு புதுப்பொலிவை நீங்கள் உணரலாம்.

 

சூடான மற்றும் சத்தான காலை உணவு:

 

ஓட்ஸ், அவல் அல்லது ஆம்லெட் போன்ற சூடான, புரதம் நிறைந்த காலை உணவுகள் உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். மேலும், இந்த குளிர்ந்த காலை பொழுது முழுவதும் உங்களுக்கு தேவையான ஆற்றலை தடையின்றி வழங்கும். இதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

Oatmeal

 

அன்றைய தினத்தை திட்டமிட வேண்டும்:

 

அன்றைய தினத்தில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து எழுதுவதற்காக 5 நிமிடங்கள் செலவிடலாம். இது புத்துணர்ச்சியான காலை பொழுது உந்துதலை உருவாக்கி, வேலையை தள்ளிப்போடும் தன்மையை குறைக்கும். தெளிவான திட்டம் இருந்தால் எந்தக் குழப்பமும் இல்லாமல் செயல்படலாம்.

 

இந்த எளிய பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் குளிர் காலத்தில் காலைப் பொழுதில் நீங்கள் புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]