image

Winter Self Care: குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க இந்த 6 வைத்தியங்களை முயற்சிக்கவும்

குளிர்காலம் தொடங்கிவிட்டால், நம் உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பது சவாலான விஷயம். குளிர்காலங்களில் உடலைக் கதகதப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். இதோ, உங்களுக்காக 6  எளிய வைத்தியங்கள்.
Editorial
Updated:- 2025-12-11, 15:41 IST

குளிர்காலத்தில், உறைபனியில் வெளியே நீண்ட நடைப்பயிற்சி செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதேசமயம், கோடையில், நீங்கள் உற்சாகத்துடன் நீண்ட நடைப்பயிற்சி செய்யலாம். எனவே, இந்த நாட்களில் நீங்கள் வெளிப்புற உடற்பயிற்சிகளைத் தவிர்க்கலாம். அதற்கு பதிலாக, இந்த நேரத்தை நீங்கள் தங்களுக்கெனப் பயன்படுத்தலாம். நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்கலாம் அல்லது வசதியான போர்வையுடன் தங்கி, ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இந்த ஓய்வு உங்கள் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும்.

 

இந்த ஆண்டு குளிர்காலத்தில் உங்கள் வாழ்க்கையில் சமநிலையைக் கண்டறியவும், மனதளவில் ஆரோக்கியமாக இருக்கவும் செய்யக்கூடிய ஏராளமான குளிர்கால சுய-பராமரிப்பு யோசனைகளை பார்க்கலாம். இந்த சுய-பராமரிப்பு வழக்கம் உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். எனவே, இந்தப் பருவத்தில் உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். இது உங்களுக்கு ஒரு அற்புதமான மற்றும் ஆரோக்கியமான குளிர்காலத்தை அளிக்கும். உங்கள் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த பழக்கங்கள் உங்களுக்கு உதவும்.

 

கனமான ஸ்வெட்டர்களைத் தேர்வு செய்வது

 

குளிர்காலத்தில் வீட்டு அலமாரியில் பெரிய அளவிலான ஸ்வெட்டர்கள் நிச்சயம் இருக்க வேண்டும். அவை, உங்கள் அலமாரியை மிகவும் அழகானதாகவும் மற்றும் ஸ்டைலாதகவும் மாற்றினாலும். இவை வெறும் ஃபேஷன் துண்டுகள் மட்டுமல்ல, குளிர்காலங்களில் உங்களுக்குத் தேவையான வெப்பத்தையும், உடலுக்கு தேவையான கதகதப்பையும் வழங்குகின்றன. நீங்கள் வெளியில் சென்றாலும் அல்லது வீட்டில் ஓய்வெடுத்தாலும், ஒரு பெரிய அளவிலான ஸ்வெட்டர் சரியான தேர்வாக இருக்கும். இது குளிருக்கு இதமான, அனைவராலும் விரும்பப்படும் ஒரு உடையாக இருக்கும்.

warm body 1

சருமத்தை ஈரப்பதமாக்குங்கள்

 

குளிர் காலநிலை பெரும்பாலும் உங்கள் சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும். எனவே, குளிர்காலங்களில் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். குளித்த பின் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒரு நல்ல மாய்ஸ்சரைசரைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள். அத்துடன், சில தரமான ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்துவது சருமப் பராமரிப்பிற்கு மேலும் உதவும்.

 

மேலும் படிக்க:  குளிர்காலத்தில் விரல்கள் வீங்கினால் இந்த 4 வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்

 

மெழுகுவர்த்தி வாசனையால் மனதை மகிழ்விக்கவும்

 

நீங்கள் ஒரு மெழுகுவர்த்தி பிரியராக இருந்தால், அறையை இனிமையாக்க ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கலாம். சந்தையில் கிடைக்கக்கூடிய குளிர்காலத்திற்கு ஏற்ற வாசனையுள்ள மெழுகுவர்த்திகளை பயன்படுத்து ஓய்வு நேரத்தை மேலும் அமைதியானதாகவும், மனதுக்கு இதமளிப்பதாகவும் மாற்றலாம். இந்த எளிய செயல்பாடு உங்கள் சுற்றுப்புறத்திற்கு ஒரு இனிமையான சூழ்நிலையையும், நேர்மறை அதிர்வையும் சேர்க்கும்.

candle

 

சூரிய ஒளியில் நிற்கவும்

 

குளிர்காலத்தில் வைட்டமின் டியின் முக்கியத்துவம் மிகப் பெரியது. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைவதைத் தவிர்க்க, வெயில் நிறைந்த நாட்களில் சிறிது நேரம் வெளியில் செலவிடுவது மிகவும் அவசியம். இது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும்.

30 நிமிடங்கள் உடற்பயிற்சி

 

தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உங்கள் ஒட்டுமொத்த மனநிலையில் மிகப் பெரிய நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த 30 நிமிட உடற்பயிற்சி குளிர்கால மந்தநிலையை எதிர்த்துப் போராட உதவுகிறது. வாரத்திற்கு சில நாட்களுக்கு நீங்கள் எளிதாகப் பின்பற்றக்கூடிய உடற்பயிற்சிகளை செய்யவும்.

 

மேலும் படிக்க: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேர்க்கடலையை எடித்துக்கொள்ளும் வழிகள்

 

சூடான குளியல்

 

நீங்கள் வேலை செய்து முடித்த பிறகு சூடான குளியல் எடுத்துகொள்வது ஒரு அற்புதமான ஓய்வை அளிக்கும். சூடான நீரில் உங்கள் தசைகள் இலகுவாகி, மன அழுத்தம் குறைந்து, நிம்மதியான உணர்வை அளிக்கும். இந்தக் குளிர்கால சுய பராமரிப்பு வழக்கத்தை நீங்கள் தவறாமல் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

winter water bath

 

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயமாக அதைப் பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]