herzindagi
white discharge rice water remedy

White Discharge Remedy : வெள்ளைப்படுதலை சரிசெய்ய உதவும் எளிய வீட்டு வைத்தியம்!

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை நீக்க இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்…
Editorial
Updated:- 2023-08-10, 08:35 IST

மாதவிடாய் நாட்களுக்கு முன் அல்லது ஓவுலேஷன் சமயத்தில் வெள்ளைப்படுதல் ஏற்படுவது இயல்பானது தான். இருப்பினும் வெள்ளைப்படுதலில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அல்லது பிறப்புறுப்பில் அரிப்பும் சேர்ந்து இருந்தால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வெள்ளைப்படுதலின் நிறம் அல்லது தன்மையில் மாற்றங்களை உணர்ந்தால் மருத்துவரை ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம். 

ஒரு சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் சற்று அதிகமாக இருக்கும். இதை ஒரு எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் சரி செய்ய முடியும். இது குறித்த தகவல்களை ஆயுர்வேத மருத்துவரான தீக்ஷா அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம். 

வெள்ளைப்படுதலை சரி செய்ய அரிசி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள மாவுச்சத்து மற்றும் அத்தியாவசிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகின்றன.

 

இந்த பதிவும் உதவலாம்: மாதுளை தோலில் இவ்வளவு சத்துக்களா, தெரிஞ்சா இனி தூக்கி எறியவே மாட்டீங்க! 

 

வெள்ளைப்படுதல் குணமாக வீட்டு வைத்தியம்  

white discharge home remedies

  • ஒரு கப் அளவிற்கு அரிசியை எடுத்துக் கொள்ளவும். 
  • இதை இரு முறை நன்கு கழுவிய பிறகு, சுத்தமான நீரை ஊற்றி 6 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும். 
  • அரிசியை ஊற வைப்பதற்கு மண் பானை அல்லது துருப்பிடிக்காத ஸ்டீல் பாத்திரத்தை பயன்படுத்தலாம். 
  • இப்போது ஊறவைத்த அரிசியை கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும். 
  • சுமார் 2-3 நிமிடங்களுக்கு இதை செய்யுங்கள். 
  • பின்னர் இதனை வடிகட்டி, அன்றைய நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். 
  • இந்த தண்ணீரை  6-8 மணி நேரங்கள் வரை வைத்திருந்து குடிக்கலாம். 
  • தினமும் குடிப்பதற்கு பிரஷ்ஷான அரிசி தண்ணீரை தயார் செய்து கொள்ளுங்கள். 

கவனிக்க வேண்டிய விஷயம் 

  •  அரிசி தண்ணீர் தயாரிக்க எந்த அரிசியையும் பயன்படுத்தலாம். 
  •  சிவப்பு அரிசியை பயன்படுத்தினால் கூடுதல் சிறப்பு. 
  • முடிந்தவரை பாலிஷ் செய்யப்படாத அரிசியை பயன்படுத்துவது நல்லது. 
  • இந்த நீர் குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளது. எனவே இருமல் மற்றும் சளி பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும். 

மற்ற நன்மைகள் 

white discharge rice water beenfits

  •  அரிசி தண்ணீர் சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது. 
  • இது குளிர்ச்சியான தன்மை உடையது. எனவே அரிசி நீரை குடித்து வந்தால் எரிச்சல், வயிற்றுப்போக்கு, அதிகப்படியான உதிரப்போக்கு மற்றும் உடல் சூட்டையும் குறைக்கலாம். 
  • இது ஆற்றல் பானமாகவும் செயல்படுகிறது. இதை குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் மற்றும் வயது முதிர்வின் அறிகுறிகளையும் குறைக்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: தீராத நோய்களை தீர்க்கும் தேங்காய் பூ, இதன் நன்மைகளை தெரிந்தால் அசந்திருவீங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]