
பெரும்பாலானவர்களுக்கு வெளிநாட்டு உணவுகள் மற்றும் பழங்கள் மீது அதிக விருப்பம் இருக்கும். விலை உயர்ந்த இந்த உணவுகளை விட பல மடங்கு ஊட்டச்சத்துக்களை நம் நாட்டு உணவுகள் மூலமாகே பெற முடியும். உள்நாட்டு உணவுகளை சாப்பிடும் படி உணவியல் நிபுணரான ருஜுதா திவாகர் அவர்களும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
நமது உள்நாட்டு பாரம்பரிய உணவுகளான நெல்லிக்காய், கொய்யா பழம், பேரிக்காய், கொடுக்காப்புளி, நாவல் பழம், தேங்காய் பூ போன்றவற்றை மறவாமல் வாங்கி உண்ணுங்கள். இன்றைய பதிவில் நமது பாரம்பரிய உணவில் ஒன்றான தேங்காய் பூவின் நன்மைகளைப் பற்றி பார்க்கப் போகிறோம். பஞ்சு போன்ற அமைப்புடன் லேசான இனிப்பு சுவையுடன் இருக்கக்கூடிய இந்த தேங்காய்பூவை பற்றி நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: மூக்கை நல்ல கூர்மையா ஸ்லிம்மாக வைத்திருக்க, இந்த பயிற்சிகளை செய்யுங்கள்!

தேங்காய் பூவில் 64% கரையக்கூடிய சர்க்கரைகள் உட்பட 66% கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இதைத் தவிர தேங்காய் பூவில் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் உள்ளன. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் மூளை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.
மூக்கில் இரத்தம் வடிவது அல்லது மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிடலாம். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றன. மேலும் மூக்கில் ஏற்படும் இரத்தக் கசிவை சரி செய்ய வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி, பேரிச்சம்பழம், கிவி, அத்திப்பழம் போன்று பழங்களை எடுத்துக் கொள்ளுமாறு நிபுணர் குறிப்பிட்டுள்ளார்

உடலில் உள்ள அமிலம் மற்றும் ஆல்கலைன் கூறுகளை சமநிலைப்படுத்தும் உணவுகளை சிறுநீர் பாதை பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் பூவில் உள்ள தாதுக்கள் இவற்றை சரி செய்ய உதவுகின்றன. இதைத் தவிர தேங்காய் பூவை சாப்பிடவதால் இன்சுலின் சுரப்பும் மேம்படும். இது சர்க்கரை நோயின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
இந்தக் கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தேங்காய் பூவை தவறாமல் சாப்பிடுங்கள். இளநீர் குடிப்பதுடன் இதுபோன்ற தேங்காய் பூக்களையும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். மேலும் வயிற்றுப்போக்கு போன்று வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கும் தேங்காய் பூ நன்மை தரும்.
வெள்ளைப்படுதல் இயல்பானது தான். இருப்பினும் இது தொடரும் பொழுது அல்லது இதில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கும் பொழுது அவை கவனிக்கப்பட வேண்டும். வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ள பெண்களுக்கும் தேங்காய் பூ நன்மை பயக்கும்.
எதையும் அளவோடு எடுத்துக் கொண்டால் மட்டுமே அதன் முழு நன்மைகளையும் பெற வேண்டும். தேங்காய் பூவையும் அளவோடு சாப்பிட்டு அதன் முழு நன்மைகளையும் பெற்றெடுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை வேகமாக குறைய, இந்த ஒரு ஆயுர்வேத மூலிகை போதும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]