கருப்பு, சிவப்பு, மாநிறம் எந்த நிறமாக இருந்தால் என்ன, முகத்திற்கு அழகு தருவது மூக்கும் முழியும் தான். ஒருவரை முதலில் பார்க்கும் பொழுது, பலரும் கவனிப்பது அவர்களுடைய முக அமைப்பை தான். மூக்கு பெரியதாகவோ அல்லது வடிவமற்றதாகவோ இருந்தால் அதை சரி செய்வதற்கு பல மேக்கப் தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனால் மூக்கை அழகாக காட்டும் இது போன்ற மேக்கப்கள் நிரந்தரம் கிடையாது. இதற்கு நிரந்தர தீர்வு காண பலரும் பலவிதமான சிகிச்சைகளும் செய்து கொள்கிறார்கள்.
மேக்கப் அல்லது சிகிச்சை இல்லாமல் இயற்கையான முறையில் மூக்கை அழகாக்க வேண்டுமா? நல்ல கூர்மையான அழகான மூக்கை பெற முகத்திற்கான சில எளிய பயிற்சிகளை செய்யலாம். இதற்கு உதவக்கூடிய சில எளிய பயிற்சிகளை இன்றைய பதிவில் காணலாம்…
இந்த பதிவும் உதவலாம்: முடி வளர்வதை விட அதிகமாக உதிர்கிறதா? ஆயுர்வேதம் சொல்லும் காரணங்கள்!
வயது கூடும் பொழுது எலும்புகள் மற்றும் தசைகளின் கட்டமைப்பு மாறுகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு பலரும் எண்ணெய் மசாஜ் செய்து பார்த்திருப்போம். குழந்தையின் மூக்கு நல்ல வடிவத்தை பெற ஒரு குறிப்பிட்ட திசையில் மசாஜ் செய்யப்படுகிறது. இதுவே பெரியவர்களாக இருந்தால், உங்கள் விரல்களைக் கொண்டு மூக்கை மேல் நோக்கி மற்றும் கீழ்நோக்கி நகர்த்தவும். மூக்கிற்கான இந்த பயிற்சியை செய்வதன் மூலம், எந்தவித அறுவை சிகிச்சையும் இல்லாமல் சரியான வடிவத்தை பெறலாம்.
மூக்கை சரியான வடிவத்திற்கு கொண்டுவர மசாஜ் செய்யலாம். மேலிருந்து கீழ்நோக்கி மற்றும் வலதிலிருந்து இடது புறமாக மசாஜ் செய்யலாம். உங்கள் கை விரல்களைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதால் தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம். ஆனால் மசாஜ் செய்யும் பொழுது அதிக அழுத்தம் கொடுக்காமல், மூக்கின் எலும்பு பகுதியில் கவனமாக மசாஜ் செய்யவும்.
மூச்சை உள் இழுத்தபடி, மூக்கை இடமிருந்து வலமாக அசைக்கவும். இந்த பயிற்சியை செய்வதால் மூக்கிற்கு ஒரு நல்ல வடிவம் கிடைப்பதோடு மட்டுமின்றி நாசி தசைகளுக்கும் நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த பயிற்சியை செய்யும்பொழுது மூக்கின் அசைவில் கவனம் செலுத்துங்கள்.
மூக்கின் இருபுறமும் லேசாக அழுத்தம் கொடுக்கவும் இவ்வாறு செய்வதால் மூக்கின் தடிமன் குறையும். இந்த பயிற்சியை செய்யும் பொழுது உங்கள் இருகை விரல்களையும் பயன்படுத்தவும். மேக்கப் போடுவதை விட மிகவும் எளிதானது இந்த பயிற்சி செய்வது. இது மூக்கிற்கு நல்ல வடிவத்தை கொடுக்கும்
அனுலாம் விலோம் சுவாச பயிற்சியை செய்வது போல ஒரு நாசி துவாரத்தை விரல்களால் மூடியபடி மற்றொன்றின் மூலமாக சுவாசிக்கவும் மூக்கின் இருபுறமும் இதை செய்து உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். இது மூக்கிற்கு சிறந்த வடிவத்தை கொடுப்பதோடு மட்டுமின்றி, மூக்கை நன்கு ரிலாக்ஸ் செய்யவும் உதவுகிறது.
தினமும் சிறிது நேரம் ஒதுக்கி இந்த பயிற்சிகளை செய்து வந்தால் நல்ல கூர்மையான அழகான மூக்கை பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பல் துலக்கும்போது நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]