ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கினால் மட்டுமே நல்ல வலுவான பற்களை பெற முடியும். இந்த அறிவுரையை வீட்டு பெரியவர்கள் சொல்லியோ அல்லது பாட புத்தகத்தின் மூலமாகவோ நிச்சயம் தெரிந்திருப்பீர்கள். இதை பெரும்பாலானவர்களும் பின்பற்றுகிறோம். ஆனால் பற்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கவும், வாய் துர்நாற்றத்தை தடுக்கவும் பற்களை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா? வாய் வழி சுகாதாரத்தை பராமரிக்க, இறந்த சரும செல்கள் மற்றும் நுண்கிருமிகளை அகற்ற நாக்கையும் சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
நாக்கை சுத்தம் செய்ய தவறினால் பின்வரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்
இது போன்ற பிரச்சனைகளை விட்டு விலகி இருக்க இனி பல் துலக்கும் பொழுது நாக்கையும் சேர்த்து சுத்தம் செய்யுங்கள். இவ்வாறு சுத்தம் செய்வதால் பின்வரும் நன்மைகளை பெற முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: சருமத்திற்கு இயற்கை பொலிவு தரும் எளிய யோகா பயிற்சிகள்!
நாக்கை தொடர்ந்து சுத்தம் செய்யாமல் இருந்தால் சுவை மொட்டுகள் தடுக்கப்படலாம். இதனால் உணவின் சுவையை அடையாளம் காண முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. நாக்கை சுத்தம் செய்யும் பொழுது அதன் மேற்பரப்பில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் அகற்றப்படுகின்றன. இதனால் செரிமானம் மேம்படும் மற்றும் உணவை நன்றாக ஜீரணிக்க முடியும்.
நாக்கை தினமும் சுத்தம் செய்யும் பொழுது வாயில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை 50% வரை குறைக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாக்கை சுத்தம் செய்வது உடலில் நச்சுக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. ஏனெனில் நாக்கை சுத்தம் செய்வதன் மூலம் தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியா மற்றும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை பெற முடியும்.
பாக்டீரியா, இறந்த சரும செல்கள் மற்றும் நாக்கில் தங்கி இருக்கக்கூடிய உணவுகளை நீக்குவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை கணிசமாக குறைக்கலாம்.
வாயில் இருக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் நச்சுக்களை அகற்றுவதன் மூலம் வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்தலாம். நாக்கை சுத்தம் செய்யும் பொழுது பல் சிதைவு, சொத்தை, ஈறு தொற்று போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய நுண்கிருமிகள் அகற்றப்படுகின்றன.
ஒரு நாளைக்கு இரண்டு முறை நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். மெல்லிய உலோகத்தால் ஆன "U" வடிவத்தில் இருக்கக்கூடிய டங் கிளீனரை பயன்படுத்தலாம்.
உங்கள் நாக்கை நீட்டி, டங் கிளீனரின் முனைகளை உங்கள் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு மெதுவாக ஸ்கிரப் செய்யவும். நாக்கு சுத்தமாகும் வரை மென்மையாக தேய்க்க வேண்டும். பிறகு சூடான நீரில் டங் கிளீனரை கழுவி வைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: எடை குறைய காலையில் எழுந்தவுடன் சீரகம் இஞ்சி டீ குடிங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]