Skin Glow Yoga : சருமத்திற்கு இயற்கை பொலிவு தரும் எளிய யோகா பயிற்சிகள்!

இயற்கையான முறையில் சரும பளபளப்பை அதிகரிக்க வேண்டுமா? நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த எளிய யோகா பயிற்சிகளை முயற்சி செய்யுங்கள்!

yogasana for skin glow

சரும பராமரிப்பில் அலட்சியம் காட்டும் பொழுது சரும பிரச்சனைகள் ஏற்பட தொடுங்குகின்றன. தூசி, மாசு அல்லது ரசாயனம் கலந்த தயாரிப்புகள் போன்ற காரணங்களாலும் சருமம் பாதிக்கப்படலாம். இளமையான, பளபளப்பான கலங்கமற்ற சருமத்தை பெற நீங்கள் செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. யோகா செய்வதன் மூலம் இதை சாத்தியம் ஆக்கலாம்.

யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் படி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் மோசமான செரிமான பிரச்சனைகளால் ஒளிவற்ற சருமம், பருக்கள் போன்ற சரும பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் பருக்கள், கட்டிகள் அல்லது சரும பாதிப்புகள் ஏற்படும்.

சரும பிரச்சனைகளின் மூல காரணமான விஷயங்களை சரி செய்வதன் மூலம் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும். யோகாசனங்கள் மற்றும் பிராணயாமா பயிற்சிகளின் மூலம் இதை சரி செய்யலாம் என யோகா நிபுணரான ஜானவி பத்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த யோகாசனங்களை தினமும் பயிற்சி செய்து வந்தால் உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை விரைவில் காணலாம்.

மத்ஸ்யாசனம் (ஃபிஷ் போஸ்)

yoga for skin glow ()

இந்த ஆசனம் ஆழ்ந்த சுவாசத்தை செயல்படுத்துகிறது மற்றும் ஹார்மோன் சமநிலையை சீராக்க உதவுகிறது. இது தசைகளை தளர்த்தி சருமத்தை நெகிழ்வாகவும் உறுதியாகவும் மாற்றுகிறது.

ஷலபாசனம்

yoga for skin glow ()

இது இரத்த ஓட்டம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சரும அமைப்பை மேம்படுத்த தினமும் ஷலபாசனம் செய்யலாம்.

அதோமுகஸ்வனாசனம்

yoga for skin glow ()

தலை கீழ்-நோக்கி இருக்கும் இந்த ஆசனம் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதனால் இரத்த ஓட்டம், நினைவாற்றல் மற்றும் கவனம் மேம்படும். மன அழுத்தத்தை குறைக்கவும் சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் இந்த பயிற்சி உதவும்.

பச்சிமோத்தாசனம்

yoga for skin glow ()

இந்த ஆசனம் முதுகு தண்டுக்கு நன்மை பயக்கும். இது உடலின் நரம்பு மற்றும் பிராண ஆற்றலை சமநிலைப்படுத்தி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சர்வங்காசனம்

yoga for skin glow ()

இந்த ஆசனம் முகத்தில் இரத்த ஓட்டத்தை சீராக்குவது மூலம் சரும அமைப்பை மேம்படுத்துகிறது.

அர்த்தமத்ஸ்யேந்திராசனம்

yoga for skin glow ()

இது உறுப்புகளில் இருந்து நச்சுகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற உதவுகிறது. இதை தொடர்ந்து செய்வதன் மூலம் தெளிவான சரும அழகை பெறமுடியும்.

பிராணயாமம்

pranayam for skin

கபால்பதி, ஷீதாலி, அணுலோம் விலோம் போன்ற பிராணயாமா பயிற்சிகளை செய்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இயற்கையான சரும பொலிவை பெற இந்த சுலபமான சுவாச பயிற்சிகள் கை கொடுக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: எந்த நிற வாழைப்பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளது தெரியுமா? இனி பலன் தெரிந்து சாப்பிடுங்க!


இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP