herzindagi
varieties of banana by colors

எந்த நிற வாழைப்பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளது தெரியுமா? இனி பலன் தெரிந்து சாப்பிடுங்க!

வாழைப்பழத்தின் நிறத்தை வைத்து அதன் சத்துக்கள் மாறுபடுமா? எந்த வாழைப்பழம் யாருக்கு நன்மை தரும். தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து படியுங்கள்…
Editorial
Updated:- 2023-08-04, 23:00 IST

எல்லா பருவ காலத்திலும் கிடைக்கக்கூடியது வாழைப்பழம். இனிப்பு சுவை நிறைந்த வாழைப்பழங்களை நேரடியாக சாப்பிட்டாலும் சரி, அல்லது மில்க் ஷேக், பனானா பிரட் போன்ற உணவுகளாக மாற்றி சாப்பிட்டாலும் சரி, அதன் தனித்துவமான சுவைக்கு நிகர் ஏதுமில்லை. இருப்பினும் வாழைப்பழங்களை சாப்பிடுவதற்கான சரியான முறை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

வாழைக்காய், வாழைப்பழம், பழுத்த வாழைப்பழம், நன்கு பழுத்த வாழைப்பழம்… இதில் ஒவ்வொரு வகை பழமும் தனித்துவமான நன்மைகளை கொண்டுள்ளன. இது குறித்த தகவல்களை ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

இந்த பதிவும் உதவலாம்: பாதங்களுக்கு ஆயில் மசாஜ், இனி கஷ்டப்படாம ஈஸியா எடையை குறைக்கலாம்!

 

வாழைப்பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்?

banana color benefits

  • வாழைப்பழம் குளிர்ச்சியான விளைவை கொண்டுள்ளது. ஆகையால் இதை எல்லா நேரங்களிலும் எடுத்துக் கொள்வது தவறானது.
  • காலை உடற்பயிற்சிக்கு பின் எடுத்துக் கொள்ளலாம்.
  • மாலையில் ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடலாம்.
  • இரவில் வாழைப்பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
  • உணவுடன் அல்லது உணவிற்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
  • வாழைப்பழங்களை பாலுடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டாம்.
  • ஆயுர்வேதத்தின் படி பழங்களை உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடலாம் அல்லது சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து எடுத்துக் கொள்ளலாம்.

எந்த வகை வாழைப்பழத்தில் சத்துக்கள் அதிகம்?

health benefits of different benefits

நிபுணரின் கருத்துப்படி, மற்றவையுடன் ஒப்பிடுகளையும் நன்கு பழுத்த வாழைப்பழமே ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதன் நிலைகளை பொறுத்து அதனுடைய நன்மைகளும் மாறுபடும்.

  • வாழைக்காய் : இதில் உள்ள புரோபயோடிக் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
  • பழுக்காத வாழைப்பழம் : இதில் நார்ச்சத்து அதிகமாகவும் சர்க்கரையின் அளவுகள் குறைவாகவும் இருக்கும்.
  • பழுத்த வாழைப்பழம் : இதிலும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன.
  • நன்கு பழுத்த வாழைப்பழம் : இது பொட்டாசியம் சத்துக்களின் சிறந்த ஆதாரமாகும். மேலும் இவற்றை ஜீரணிப்பது எளிதாகும்.
  • அதிகமாக பழுத்த வாழைப்பழம் : இந்த வகை வாழைப்பழம் புற்று நோய்க்கு எதிரான பொருட்களை உற்பத்தி செய்கிறது. இதில் சர்க்கரையின் உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால் மிகவும் இனிப்பாக இருக்கும்.

உங்களுடைய உடல் நிலையை பொறுத்து உங்களுக்கான சரியான வாழைப்பழத்தை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: நிகரற்ற நன்மைகளை அள்ளித் தரும் வாழைப்பூ!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]