Vazhaipoo Benefits : நிகரற்ற நன்மைகளை அள்ளித் தரும் வாழைப்பூ!

வாரத்தில் ஒரு முறையாவது வாழைப்பூவை சமைத்து சாப்பிடுங்கள்! இதை செய்தால் பல நோய்கள் உங்களை விட்டு தூரம் விலகி நிற்கும்...

banana blossom health benefits

பயனற்ற பொருள் என்று இவ்வுலகில் எதுவும் இல்லை. வாழை இலையில் தொடங்கி வாழைப்பூ வரை வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மருத்துவ நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. இதை சுத்தம் செய்வது கடினமாக தோன்றலாம், ஆனால் இதன் பலன்களை தெரிந்தால் இனி வாழைப்பூவை தேடி வாங்குவீர்கள்.

விலை மலிவாக கிடைக்கக்கூடிய, நம் நாட்டில் விளையக்கூடிய இது போன்ற பொக்கிஷங்களை உண்டு பயன்பெறுங்கள். குறிப்பாக பெண்கள் வாழைப்பூவை தவறாமல் வாரம் ஒரு முறையாவது சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைப்பூவின் ஆரோக்கிய நன்மைகளை இப்போது விரிவாக பார்க்கலாம்.

எடை இழப்புக்கு உதவும்

banana blossom vazhai poo benefits

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தும், பலன் தரவில்லையா? இனி வாழைப்பூவை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாழைப்பூவை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுவதாக தெரியவந்துள்ளது. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

மன அழுத்தம் நீங்கும்

வாழைப்பூவில் உள்ள மெக்னீசியம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மன அழுத்தத்தை எதிர்க்கும் பண்புகள் மன அழுத்தத்தை நீக்கவும், மனநிலையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. அதிக வேலை மற்றும் பணி சுமை காரணமாக நீங்கள் மன அழுத்தத்தை உணர்ந்தால், வாழைப்பூவை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய்க்கு சிறந்தது

வாழைப்பூ குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரையின் அளவை பெருமளவு கட்டுப்படுத்தலாம். இன்றைய வாழ்க்கை சூழலில் பத்தில் ஐந்து பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

இரும்புச் சத்து நிறைந்தது

banana blossom flower uses

வாழைப்பூவில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. இது ஹீமோகுளோபின் குறைபாட்டை நிவர்த்தி செய்கிறது. இதை வாரம் வரும் முறை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனையையும் குறைக்கலாம். மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம், தாமிரம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் E போன்ற ஏராளமான சத்துக்களும் உள்ளன.

இந்த பதிவும் உதவலாம்: ஆயுர்வேத மூலிகையான சீந்திலை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP