herzindagi
giloy benefits and usage by expert

Giloy Benefits & Usage : ஆயுர்வேத மூலிகையான சீந்திலை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

மன அழுத்தத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்க வேண்டுமா? ஆயிர்வேத முறைப்படி சீந்திலை சரியான முறையில் பயன்படுத்தி பலன்பெறுங்கள்…
Editorial
Updated:- 2023-08-01, 16:19 IST

ஆயுர்வேத மருத்துவத்தில் பல மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நினைவாற்றலை அதிகரிப்பது முதல் மன அழுத்தத்தை குறைப்பது வரை பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றன. இந்த அற்புத மூலிகைகளில் சீந்திலும் ஒன்று. சீந்திலை ஆயுர்வேத மருத்துவத்தின் அமிர்தம் என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் கொரோனா காலத்தில், பலரும் தங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சீந்திலை பயன்படுத்தினர்.

சீந்திலுள்ள பல மருத்துவ பண்புகள், பல நோய்களில் இருந்து நிவாரணம் பெற உதவுகின்றன. இதை பயன்படுத்துவதற்கான சரியான முறையை ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

 

இந்த பதிவும் உதவலாம்: எடையை குறைக்க இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங், இந்த விரதத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?

 

சீந்தில் நன்மைகள்

giloy uses

  • காய்ச்சல், டெங்கு, சிக்கன்குனியா, வைரஸ் காய்ச்சல், இருமல், சளி, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துவதில் சீந்தில் நன்மை தரும்.
  • வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கும்.
  • சீந்திலில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டி பயாட்டிக், வயது முதிர்வை எதிர்க்கும் பண்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைரஸ் எதிர்ப்பு, சர்க்கரை நோய் எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
  • இது எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும் நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது உங்களுக்கு ஏதேனும் உடல் நல பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை ஆலோசித்த பின் எடுத்துக் கொள்ளவும்.

சீந்தில் பயன்படுத்தும் முறை

how to use giloy

  • சீந்திலின் இலைகள் மற்றும் தண்டுகளை இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் இதனை இடித்து ஒரு கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் பாதியாக வற்றிய பின் வடிகட்டி குடிக்கவும்.
  • சீந்திலை பொடி வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம். சீந்தில் பொடியை தண்ணீரில் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும் மறுநாள் காலையில் இந்த நீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து குடிக்கலாம். சர்க்கரை நோய் இல்லாதவர்கள், இதில் சுவைக்காக வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சீந்தில் இலைகளுடன் துளசி மஞ்சள் மற்றும் கிராம்பு சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
  • வெந்நீருடன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் சீந்தில் பொடியை கலந்து  காலையில் எழுந்தவுடன் குடிக்கலாம். 
  • வெந்நீருடன் 10 மில்லி சீந்தில் சாறு கலந்து, சாப்பிடுவதற்கு முன்பு காலையில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதை ஜீரணிக்க கடினமாக இருக்கும் என்பதால் நல்ல வளர்ச்சிதை மாற்றம் உள்ளவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த பதிவும் உதவலாம்: பிரசவத்திற்கு பிறகு, பெண்கள் எதற்காக பெல்ட் அணிய வேண்டும் தெரியுமா?

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]