herzindagi
intermittent fasting health benefits weight loss

Intermittent Fasting : எடையை குறைக்க இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங், இந்த விரதத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?

இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமல்ல, இதை பின்பற்றுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம்!
Editorial
Updated:- 2023-07-30, 13:26 IST

இன்றைய வாழ்க்கை சூழலில் உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான டயட் முறைகளை பின்பற்றுகிறார்கள். அதில் இன்டர்மீடென்ட் ஃபாஸ்டிங் அல்லது இடைப்பட்ட உண்ணாவிரதமும் ஒன்று. இந்த டயட் திட்டத்தில் உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் வளர்ச்சிதை மாற்றம் மேம்படும். இது உடல் எடையை குறைப்பதோடு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருகிறது.

இந்த உணவு முறையை சரியாக பின்பற்றினால் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம். இதன் மூலம் உங்களுடைய இதயம் மற்றும் மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் முறையின் தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணரான ரித்து பூரி அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

 

இந்த பதிவும் உதவலாம்: அம்மாக்கள் ஸ்லிம் & ஃபிட்டாக இருக்க, இந்த ஒரே ஒரு யோகாவை செய்தால் போதும்!

 

இன்சுலின் உணர்திறன்

intermittent fasting for diabetic patients

இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் அல்லது இடைப்பட்ட உண்ணாவிரதத்தை கடைப்பிடிக்கும் பொழுது இன்சுலின் உணர்திறன் மேம்படும். இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இந்த விரதத்தில் இருக்கும் பொழுது உடலில் சேமிக்கப்பட்டுள்ள குளுக்கோஸ் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் இந்த டயட் முறையை பின்பற்றுபவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பும் கணிசமாக குறைகிறது.

அழற்சியை குறைக்கும்

நாள்பட்ட அழற்சி அல்லது வீக்கம் இதய நோய், சர்க்கரை நோய் அல்லது புற்றுநோய் போன்ற உடல்நல பிரச்சனைகளுடன் தொடர்புடையது. இந்நிலையில் இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் முறையை கடைபிடிப்பது உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இதை கடைப்பிடிப்பவர்கள் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

இதய ஆரோக்கியம் 

intermittent fasting for heart

இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் இதயத்திற்கும் மிகவும் நல்லது. இந்த விரத முறையில் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதே சமயம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளும் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இதன் மூலம் இதய நோய் வருவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம்.

புதிய செல்களை உருவாக்கும்

இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் செல்களை புத்துயிர் பெற செய்கிறது. நீங்கள் விரதத்தை கடைப்பிடிக்கும் பொழுது உடலில் உள்ள பழைய மற்றும் சேதம் அடைந்த செல்கள் அகற்றப்பட்டு புதிய செல்கள் உருவாகின்றன. இந்த விரதம் உடலின் செல்களில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

மூளை ஆரோக்கியம் 

intermittent fasting for brain health

இந்த விரத முறை மூளையின் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரும். சில விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்விலும் இது புதிய நரம்பு செல்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வயது தொடர்பான நரம்பு தளர்ச்சி பிரச்சனைகளை தவிர்க்கவும் இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் முறையை பின்பற்றலாம். இது நினைவாற்றல் இழப்பு மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

இந்த விரதம் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது. எனவே எந்த ஒரு உணவு முறையை பின்பற்றுவதற்கு முன் உணவியல் நிபுணர் அல்லது மருத்துவரை கட்டாயமாக ஆலோசனை செய்ய வேண்டும்.

 

இந்த பதிவும் உதவலாம்: சமையலுக்கு ஏன் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]