Yoga for Busy Moms : அம்மாக்கள் ஸ்லிம் & ஃபிட்டாக இருக்க, இந்த ஒரே ஒரு யோகாவை செய்தால் போதும்!

அனைத்து வயது தாய்மார்களுக்கும் ஏற்ற ஒரு சிறந்த யோகாசனத்தை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். இதை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்…

yoga for busy moms

தாய்மையைப் போல ஒரு அற்புத உணர்வு இவ்வுலகில் இல்லை. வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு, இடைவிடாத முயற்சி, தூக்கம் இல்லாத இரவுகள், எண்ணற்ற தியாகங்கள் மற்றும் கடின உழைப்புக்கு முன் உதாரணமாக இருப்பவர்கள் பெண்கள். இருப்பினும் அவர்கள் சம்பள உயர்வோ, ஊக்கத்தொகையோ, பதவி உயர்வோ, விடுமுறையோ எதிர்பார்ப்பதில்லை. சுயநலமற்ற அன்பும் அக்கறையும் காட்டுவது அம்மாக்கள் மட்டுமே! ஆனால் உண்மையில் பெண்கள் அன்பானவர்கள் மட்டுமல்ல வலிமை மிக்கவர்களும் கூட.

பிரசவ வலியை தாங்கி அடுத்த கணமே பிறந்த தன் குழந்தைக்கு பால் புகட்ட தயாராக எழுந்து நிற்பவள் பெண்! ஆனால் பிரசவத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய உடல் மாற்றங்களால் நீங்கள் மனதளவில் சோர்ந்து விடாதீர்கள். உங்கள் உடற் தகுதியை மேம்படுத்த ஒரு சில யோகா பயிற்சிகளை செய்யலாம். அந்த வகையில் அனைத்து வயது தாய்மார்களுக்கும் பயன் தரக்கூடிய ஒரு அற்புத யோகாசனத்தை பற்றி இன்றைய பதிவில் பிகிர்ந்துள்ளோம். இது குறித்த தகவல்களை யோகா நிபுணரான அக்ஷர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம். எவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு எளிமையான ஆசனமான "வஜ்ராசனத்தை" செய்யும்படி நிபுணர் பரிந்துரைக்கிறார்.

வஜ்ராசனம் செய்வது எப்படி?

vajrasana benefits for moms

  • இந்த ஆசனம் செய்வதற்கு சௌகரியமான யோகா மேட்டை பயன்படுத்தவும்.
  • வஜ்ராசனம் செய்வதற்கு முதலில் தரையில் மண்டியிட்டு உட்காரவும்.
  • முழங்கால்களையும், கணுக்கால்களையும் ஒன்றாக நீட்டி பாதங்களை நேராக வைக்கவும்.
  • மூச்சை வெளியேற்றும் போது, கால்களின் மீது உட்காரவும்.
  • இடுப்பு, கணுக்கால் மற்றும் தொடை கெண்டைக்கால் பின் தசையின் மீது இருக்க வேண்டும்.
  • தொடைகளின் மீது கைகளை வைத்து, வசதியாக உட்காரவும்.
  • முதுகுத்தண்டு நேராக இருக்கும் நிலையில் உட்கார்ந்து, மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்றவும்.

வஜ்ராசனம் நன்மைகள்

yoga for mom of all ages

  • உடல் பருமனை குறைக்க உதவும்.
  • செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவுகிறது.
  • இடுப்பு தசைகளை வலுப்படுத்தவும் மற்றும் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • அசிடிட்டி மற்றும் வாயுத்தொல்லையை குறைக்கிறது
  • உடலில் ஊட்டச்சத்துக்கள் சிறப்பாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது
  • முதுகு வலிக்கு நிவாரணம் தரும்.
  • மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது.
  • இது தொடைகளை வலுப்படுத்தவும், மூட்டு வலியைப் போக்கவும் உதவுகிறது.
  • மனதை அமைதிப்படுத்துகிறது.
  • அடிவயிற்றில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
  • பாலின உறுப்புகளை வலிமையாக்குகிறது.

முக்கிய குறிப்பு

பின்வரும் பிரச்சனை உள்ளவர்கள் வஜ்ராசனம் செய்வதை தவிர்க்கும்படி நிபுணர் அறிவுறுத்துகிறார்.

  • முழங்கால் அறுவை சிகிச்சை செய்தவர்கள் அல்லது முழங்கால் பிரச்சனை உள்ளவர்கள்.
  • முதுகுதண்டில் பிரச்சனை உள்ளவர்கள்.
  • குடல் புண், குடலிறக்கம் அல்லது வேறு ஏதேனும் குடல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள்.

இந்த பயிற்சியுடன் உங்களுடைய நுரையீரலை வலுப்படுத்த பிராணயாமா, தியானம் போன்ற பயிற்சிகளையும் செய்யலாம். இது போன்ற மூச்சுப் பயிற்சிகளால் மன அமைதியும் கிடைக்கும். சூரிய நமஸ்காரம் மற்றும் சந்திர நமஸ்காரத்தை செய்து உங்களுடைய உடல் வலிமை, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். யோகாசனங்களின் முழு நன்மைகளையும் பெற சுவாசிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அம்மாக்கள் அனைவரும் இந்த யோகாவை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். சுலபமாக செய்யக்கூடிய இந்த பயிற்சியானது உங்களுக்கு ஸ்லிம் & ஃபிட்டான உடல் அழகை கொடுக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: குறைவான தூக்கம் இதய நோய்களின் ஆபத்தை அதிகரிக்குமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP