Sleep and Heart Health : குறைவான தூக்கம் இதய நோய்களின் ஆபத்தை அதிகரிக்குமா?

தினமும் போதுமான நேரம் தூங்குகிறீர்களா? குறைவான தூங்கும் நேரம் இதய நோய்களின் ஆபத்தை அதிகரிக்குமா? இதற்கான விடையை நிபுணரிடம் இருந்து தெரிந்துகொள்வோம்…

sleeplessness heart problem by expert

உடலும் மனதும் சீராக செயல்பட நல்ல தூக்கம் அவசியமானது. தெளிவான சிந்தனை, மன ஆரோக்கியம் போன்ற விஷயங்கள் சரியாக இருக்க போதுமான தூக்கம் முக்கியம். இதைத் தவிர இதய ஆரோக்கியமும் நல்ல தூக்கத்தை சார்ந்து உள்ளது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் பலரும் தூங்குவதற்கு கூட நேரம் ஒதுக்க முடியாமல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

தினமும் போதுமான நேரம் தூங்காத நிலையில் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. தூக்கமின்மை இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்? இந்த கேள்விக்கான விளக்கத்தை டாக்டர் அமித் சௌராஷியா அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.

தூக்கமின்மை - இதய ஆரோக்கியம்

sleeplessness side effects

போதுமான தூக்கம் இல்லாத நிலையில் நரம்பு மண்டலத்தின் சமநிலை பாதிக்கப்படும். இந்த ஏற்றத்தாழ்வு காரணமாக இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு மற்றும் மன அழுத்த ஹார்மோனான கார்ட்டிசோல் அதிகரிக்கலாம். இதன் விளைவாக இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது.

தூக்கமின்மை - மாரடைப்பு

குறைவான தூக்கம் அல்லது தூக்கமின்மையால் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயம் அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் இதய நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தொடர்ந்து பல இரவுகள் குறைந்த நேரம் மட்டுமே தூங்குவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்க தொடங்குகிறது. இது இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இதனால் எதிர்காலத்தில் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

sleeplessness heart problems

குறைவான தூக்கம் உடலில் நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் அதிகரிக்கிறது. இந்த கெட்ட கொலஸ்ட்ரால் இதய தமனிகளில் அடைப்பு ஏற்படலாம். இதனால் தமனிகள் சுருங்கி இரத்த ஓட்டத்தை தடுக்கின்றன.

தூக்கமின்மையால் இன்சுலின் உணர்த்திறன் மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். இதனால் உடல் எடையும் அதிகரிக்க கூடும். மேலும் டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் போதுமான நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனுடன் இதயத்திற்கு நலம் தரும் உணவுகளை சாப்பிடுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் 5 நிமிடங்கள் செய்தால் போதும், கழுத்து சதையை விரைவில் குறைத்திடலாம்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP