
பொதுவாக சமையலுக்கு கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற பல வகையான எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் எண்ணெய் உடல் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சமையலுக்கு சரியான எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் அடிக்கடி நோய்வாய்ப்படுவதை தடுக்கலாம்.
சுத்தமான வெர்ஜின் ஆலிவ் எண்ணெயில் பீட்டா கரோட்டின், லூட்டின் போன்ற பல ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலின் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன. இதனை சமையலுக்கு பயன்படுத்துவதால் ஒரு சில புற்றுநோயின் அபாயத்தையும் பெருமளவு குறைக்கலாம் என சில ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. சமையலுக்கு ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவதால் பின்வரும் நன்மைகளை பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு வயது ஒரு தடை அல்ல, 30 வயதிலும் ஈஸியா எடையை குறைக்கலாம்!

ஆலிவ் எண்ணெயில் உள்ள நல்ல கொழுப்புகள் இதய நோய் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகளை குறைக்கின்றன. இதில் உள்ள சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இதை சமையலுக்கு பயன்படுத்தி வர உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம். இதற்கு சுத்திகரிக்கப்படாத சுத்தமான வெர்ஜின் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்த வேண்டும்.
ஆலிவ் எண்ணெய் உடலின் உட்புற அமைப்பை சுத்தப்படுத்துகிறது. உடல் சரியாக செயல்பட கல்லீரல் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இந்நிலையில் இதற்கு உதவக்கூடிய ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை,1/3 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலந்து குடிக்கலாம். ஆலிவ் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல கொழுப்புகள் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். வெண்ணெக்கு பதிலாக ஆரோக்கியம் நிறைந்த ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் ஆலிவ் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆட்டோ இம்யூன் டிசிஸ் போன்ற நோய்களை எதிர்த்துப் போராடவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த எண்ணெயை பயன்படுத்தி நீண்ட ஆயுளுடன் நோயின்றி வாழலாம்
ஆலிவ் எண்ணெயில் உள்ள பண்புகள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
ஆலிவ் எண்ணெய் வயது முதிர்வு, நினைவாற்றல் இழப்பு நோய் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளின் ஆபத்தை குறைக்கிறது. இது மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: குறைவான தூக்கம் இதய நோய்களின் ஆபத்தை அதிகரிக்குமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]