ஆரோக்கியமாக இருக்க காய்கறிகளை சாப்பிடவேண்டும். பச்சை நிற கீரைகள் மற்றும் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும்படி மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள். காய்கறிகளைப் பற்றி பேசுகையில் வெண்டைக்காயை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. இதில் பல வைட்டமின்களும், தாதுக்களும், நார்ச்சத்தும், கார்போஹைட்ரேட்களும் நிறைந்துள்ளன. உடல் எடை, கண்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க வெண்டைக்காய் சாப்பிடலாம்.
வெண்டைக்காயில் உள்ள ஃபிளவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரெடிள்களின் ஆபத்தை குறைக்கின்றன. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும் ஒரு சிலர் வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணரான ரித்து பூரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: எடையை குறைக்க இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங், இந்த விரதத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?
உங்களுக்கு அலர்ஜி எதிர்வினைகள் இருந்தால் வெண்டைக்காயை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கொக்கோ அல்லது செம்பருத்தி பூக்களுக்கு அலர்ஜி உள்ளவர்களுக்கு வெண்டைக்காய் தீங்கு விளைவிக்கலாம். இதனால் சரும பிரச்சனைகள் அல்லது இரைப்பை குடல் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம்.
சிறுநீரகம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் குறிப்பாக சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையை எதிர்கொண்டவர்கள் வெண்டைக்காயை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் ஆக்ஸலேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். வெண்டைக்காயிலும் ஆக்சலேட் உள்ள காரணத்தினால், அது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
இரைப்பை குடல் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது அடிக்கடி வாயு வீக்கம் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் வெண்டைக்காயை தவிர்க்க வேண்டும். இது போன்ற பலவீனமான குடல் ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு, வெண்டைக்காய் சாப்பிடும் பொழுது அதிகப்படியான வாயு மற்றும் உப்புசம் பிரச்சனை ஏற்படலாம். இது அவர்களுக்கு எதிர்காலத்தில் நிறைய பிரச்சனைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
வெண்டைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காயை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை ஆலோசனை செய்வது நல்லது. மேலும் வெண்டைக்காயை சமைக்கும் பொழுது குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் K இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இரத்தம் உறைதல் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது இந்த பிரச்சனைக்காக மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி வெண்டைக்காயை சாப்பிடக்கூடாது.
இந்த பதிவும் உதவலாம்: பிரசவத்திற்கு பிறகு, பெண்கள் எதற்காக பெல்ட் அணிய வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]