Hair Fall Ayurveda : முடி வளர்வதை விட அதிகமாக உதிர்கிறதா? ஆயுர்வேதம் சொல்லும் காரணங்கள்!

ஆயுர்வேதத்தின் படி, முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்களை தெரிந்துகொள்வோம். முடி உதிர்வு இயல்பை விட அதிகமாக இருந்தால் அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்…

hair fall reasons according to ayurveda

முடி உதிர்வு இயல்பானது தான். ஆனால் முடி உதிர்வு அதிகமாகி, புதிய முடி அதை விட குறைவாக வளரும் பொழுது உச்சந்தலையில் முடி குறையத் தொடங்குகிறது. பொதுவாக நமது உச்சந்தலையில் 90% முடி வளரும், மீதம் உள்ள 10% முடி வளர்ச்சி பெறாமல் இருக்கும். சில மாதங்களுக்குப் பிறகு வளர்ச்சி பெறாத அந்த 10% முடி உதிர்ந்து புதிய முடி வளர தொடங்கும். இப்படி தான் முடி வளர்ச்சியின் சுழற்சி நடைபெறும். இந்த சுழற்சியால் தினமும் ஒரு சில முடி உதிர்வது இயல்பானது தான். ஆனால் நீங்கள் வழக்கத்தை விட அதிகமாக முடி உதிர்வதை சந்தித்தால், அல்லது புதிய முடியின் வளர்ச்சி தடைப்பட்டால் மற்றும், முடி மெலிந்து காணப்பட்டால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

முறையற்ற உணவு, மாசு அல்லது ஏதேனும் உடல் நல பிரச்சனையால் முடி உதிர்வு ஏற்படலாம். ஆயுர்வேதத்தின் படி முடி உதிர்வதற்கான காரணங்களை ஆயுர்வேத நிபுணரான நீத்திகா கோஹ்லி அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.

முடி உதிர்வதற்கான காரணங்கள்

hair fall ayurveda

  • ஆயுர்வேதத்தின் படி, முடி உதிர்தல் உடலின் மூன்று தோஷங்களுடன் நேரடியாக தொடர்புடையது. இவற்றின் சமநிலையின்மையால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
  • பலவீனமான இரத்தம் மற்றும் சளி புதிய முடியின் வளர்ச்சியை தடுக்கிறது.
  • உடலில் பித்த தோஷம் அதிகரிக்கும் பொழுது, உடலில் இருந்து அதிக வெப்பம் வெளியேறுகிறது. இதன் காரணமாக முடியின் வேர்க்கால்களில் வீக்கம் ஏற்பட்டு முடி வளர்ச்சி தடைபடலாம்.
  • சமநிலையற்ற உணவுப் பழக்கத்தால் உடலுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம், இதுவும் முடி உதிர்வதற்கான ஒரு முக்கிய காரணமாகும்.
reasons for hair loss
  • மன அழுத்தத்தாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது.
  • சரியான நேரத்தில் தூங்காதது உடலில் வாத தோஷத்தை அதிகரிக்கிறது, இதன் காரணமாகவும் முடி உதிர்கிறது.
  • உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையின்மையும் முடி உதிர்வுக்கு ஒரு காரணம்.

இந்த பதிவும் உதவலாம்: சருமத்திற்கு இயற்கை பொலிவு தரும் எளிய யோகா பயிற்சிகள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP