முத்துக்களே தோற்றுவிடும், இதன் அழகில். ஆண்டுதோறும் கிடைக்கக்கூடிய இந்த சுவை நிறைந்த பழத்தில் நன்மைகளும் ஏராளம். இரத்த சிவப்பணுக்களின் குறைபாடு உள்ளவர்களுக்கு மாதுளை ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். இத்தகைய நற்பண்புகள் உடைய பழத்தின் பெரும் பகுதியை நாம் தூக்கி எறிகிறோம்.
மாதுளையின் தோலில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இனி அதை தூக்கி எறியாமல் டீயாக செய்து குடிக்கலாம் அல்லது காய வைத்து பொடியாகவும் சேமித்து வைத்துக் கொள்ளலாம். மாதுளை பழ தோலின் ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் படித்தறியலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை வேகமாக குறைய, இந்த ஒரு ஆயுர்வேத மூலிகை போதும்!
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற காரணங்களால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் நச்சுக்களை வெளியேற்ற வேண்டியது அவசியம். இதற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்த மாதுளையின் தோலை பயன்படுத்தலாம். ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை அகற்றவும் மாதுளையின் தோலை கொண்டு டீ செய்து குடிக்கலாம்.
கோடைக்கு குட்பை சொல்ல வேண்டிய மாதத்தை நெருங்கிவிட்டோம். இனி அடுத்து வரப்போகும் மழைக்காலத்தில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை தவிர்த்திட உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உணவே மருந்தானால் உங்கள் உடல்நிலை பிரச்சினைகளுக்கு தனியாக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது. மழைக்காலங்களில் காலையில் எழுந்தவுடன் மாதுளை தோல் டீ குடிக்கலாம். இதை குடித்து பாருங்கள் சளி பிடிக்கவே பிடிக்காது.
அதிகம் செலவு செய்து சப்ளிமென்ட்களை வாங்குவதற்கு பதிலாக இனி பணத்தை மிச்சப்படுத்துங்கள். மாதுளை பழத்தின் தோல் உங்களை வலுவாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றும். இதில் உள்ள வைட்டமின் C உடலின் குணப்படுத்தும் செயல்முறையை விரைவுப்படுத்துகிறது. இதனால் நோய் அல்லது காயங்களில் இருந்து விரைவில் மீண்டு வரலாம்.
ஆயுள் முழுவதும் எலும்புகள் பலமாக இருக்க மாதுளை தோல் டீயை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
செரிமானத்திறன் சிறப்பாக இருந்தால் கல் கூட ஜீரணமாகும் என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள் . உங்களுடைய செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள குடலின் ஆரோக்கியத்தை பராமரிக்க மாதுளையின் தோலை பயன்படுத்தி டீ செய்து குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மூக்கை நல்ல கூர்மையா ஸ்லிம்மாக வைத்திருக்க, இந்த பயிற்சிகளை செய்யுங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]