உடல் எடையைக் குறைக்க முடியல என்ற புலம்பல் வேண்டாம்; இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

உடல் எடை வேகமாக குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் புதினாவில் டீ போட்டு குடிக்கலாம்.

reduce body weight

இன்றைக்கு ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது உடல் எடை அதிகரிப்பு. மற்றவர்களை விட குண்டாக இருக்கிறோம் என்று புலம்புவர்கள் எப்படி உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற தேடலில் அதிகம் ஈடுபடுவார்கள். இதற்காக டயட்டில் இருப்பது முதல் ஜிம்மிற்குச் சென்று ஒர்க் அவுட் செய்வது என அவரவர்களுக்குத் தெரிந்த நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இந்த வரிசையில் இன்றைக்கு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும் பானங்கள் என்னென்ன? எப்படி இதை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

ginger lemon tea

உடல் எடையைக் குறைக்க உதவும் பானங்கள்:

எலுமிச்சை ஜூஸ்:

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸைப் பருகலாம். ஜூஸ் என்றவுடன் சர்க்கரை போன்றவற்றையெல்லாம் சேர்த்து சாப்பிட வேண்டும் என்றில்லை. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கொஞ்சம் கலந்துக் குடிக்கவும். இதில் உள்ள வைட்டமின் சி உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கலோரிகளைக் குறைக்க உதவுகிறது.

பாகற்காய் ஜூஸ்:

உடலில் உள்ள தேவையில்லாத நச்சுகள் மற்றும் கொழுப்புகளைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பாகற்காயில் ஜூஸ் செய்து சாப்பிடலாம். பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு தோல் சீவி சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்தாவ் போதும் பாகற்காய் ஜூஸ் ரெடி. கசப்புத் தன்மை உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் எலுமிச்சை சாறு, வெல்லம் , தேன் சேர்ந்துக் கலந்துக் குடிக்கலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவியாக உள்ளது.

க்ரீன் டீ:

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் தேர்வாக உள்ளது க்ரீன் டீ. தினமும் காலையில் வெறும் வயிற்றில் க்ரீன் டீயைக் குடித்து வந்தால் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

சீரகத் தண்ணீர்:

செரிமான அமைப்பை சீராக்கி உடலில் தங்கியுள்ள கொழுப்புகளைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், சீரகத் தண்ணீரை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் சீரகத் தண்ணீரைக் குடித்து வரும் போது ஆரோக்கியத்துடன் உடல் எடையையும் குறைக்க முடியும்.

சோம்பு தண்ணீர்:

வயிறு உப்பிசம், அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகள் இருந்தால் உடலின் செரிமான அமைப்பு சீராக இருக்காது. எனவே இப்பிரச்சனைகளைச் சரிசெய்ய தினமும் சோம்பு தண்ணீர் குடிக்கலாம். இது செரிமான அமைப்பை சீராக்கி உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.

மேலும் படிக்க:தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்க போதும்- 80 வயது வரை ஆரோக்கியமாக இருப்பீங்க!!

loss belly fat

புதினா டீ:

உடல் எடை வேகமாக குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் புதினாவில் டீ போட்டு குடிக்கலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதோடு இஞ்சியும் சேர்த்து பருகுவது நல்லது.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP