herzindagi
list of physical activity

Physical Activity: வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ வேண்டுமா? உங்களுக்கான சிறந்த தேர்வு இது தான்!

<span style="text-align: justify;">உடலில் உள்ள எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி உதவியாக உள்ளது.</span>
Editorial
Updated:- 2024-01-19, 17:11 IST

இன்றைக்கு உள்ள அவசர உலகத்தில் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறோம். வேலை தான் முக்கியம் என்று உடல் நலத்தைக் கண்டுகொள்வதே இல்லை. குறிப்பாக நம் முன்னோர்கள் மேற்கொண்டதைப் போன்று நாம் பார்க்கும் வேலைகளிலும் எவ்வித உடல் உழைப்பும் இல்லை என்பதால், இளம் வயதிலேயே பல விதமான உடல் பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகிறோம். இதற்கான பல சிகிச்சைகளை எடுத்துக் கொண்டாலும் இயற்கையான உடல் அமைப்பு இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் பிரச்சனையாகவே அமையும்.

நீங்கள் எப்போதும் நலமுடன் வாழ வேண்டும் என்றால், ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் செயல்பாடுகள் அதாவது உடற்பயிற்சிகளில் தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட வேண்டும்.  இது உங்களை நாள் முழுவதும் உற்சாகத்துடனும் எவ்வித உடல் பாதிப்பும் இல்லாமல்  இருப்பதற்கு உதவியாக இருக்கும். இதோ வேறு என்னென்ன நன்மைகள்? உள்ளது என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

physical activity for women

உடற்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:

மேலும் படிங்க: வைட்டமின் பி12 பாதிப்பின் அறிகுறிகள் இது தான்!

  • உடற்பயிற்சி நமது மன நிலையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அலுவலகம் மற்றும் வீட்டில் ஏற்படும் டென்சன்களைக் குறைக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி தான் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு நாளைக்கு நீங்கள் 20 முதல் 35 நிமிடங்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது மன அழுத்தம் குறையும். மேலும் பதற்றம், மன அமைதி போன்றவை ஏற்படக்கூடும்.
  • உங்களது வாழ்க்கையில் தொடர்ந்து உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொண்டு வந்தால் உங்களின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். 
  • குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் மூட்டு வலி, தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகளை ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், உங்களுக்கு சிறந்த சிகிச்சையாக அமைகிறது உடற்பயிற்சி. ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் வயதான காலத்தில் தசைகள் சோர்வடைவதைத் தடுக்கும்.
  • உடலில் உள்ள எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி உதவியாக உள்ளது.
  • தொடர்ச்சியாக நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி நமது ஆயுள் காலத்தை அதிகரிப்பதோடு, வயதான காலத்தில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
  • உடற்பயிற்சியினால் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும் என்பதோடு மாணவர்கள் கவன சிதறல் இன்றி படிக்க முடியும். இதோடு உங்களின் நினைவாற்றலும் அதிகரிக்கும். 

outdoor activity

இது போன்று பல்வேறு உடற்பயிற்சி செய்வதால் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதால், ஜாக்கிங், வாக்கிங், டென்னிஸ், கூடைப்பந்து, தியானம், யோகா, போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிங்க: பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த டயட் எடுத்துக்கோங்க!

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]