herzindagi
list of immunity foods

Immunity Boosting Foods:பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த டயட் எடுத்துக்கோங்க!

<span style="text-align: justify;">ஆண்களை விட பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுவானதாக இருந்தாலும், சில நேரங்களில் அவர்களும் பல தொற்று பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-01-18, 19:30 IST

ஆரோக்கியமான உடலுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நமது உடலில் தேவையில்லாதவற்றை நிராகரிக்கும் வகையில் இதன் செயல்பாடு அமைகிறது. குறிப்பாக பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நோய் தொற்று நோய் கிருமிகளை அடையாளம் கண்டு நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆண்களை விட பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுவானதாக இருந்தாலும், சில நேரங்களில் அவர்களும் பல தொற்று பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இதிலிருந்து தப்பிக்கவும், உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்  நீங்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்ளுங்கள். 

boosting immunity

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்:

  •  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் சமச்சீரான உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்களுடைய உணவு முறையில் காய்கறிகள், இலைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • குயினோவோ, பழுப்பு நிற அரிசி, முட்டை மற்றும் மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள் 
  • நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்துப் போராடுவதில் இஞ்சி முக்கியத்துவம் பெறுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள்  நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.தொற்று நோய் பாதிப்புகளையும் குறைக்கிறது. 
  • இஞ்சியை நீங்கள் டீ , சட்னி, சூப்கள் மற்றும் கலவை சாதங்களில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். காலையில் இஞ்சி சாறு குடிக்கும் பொது உடலின் செரிமான பிரச்சனைகள் சீராகிறது. 

மேலும் படிக்க: குளிர்காலமும் குழந்தைகளின் உடல் நல பிரச்சனைகளும்!

  • பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மிகவும் சர்க்கரை உணவு பொருட்கள் தவிர்ப்பதை நல்லது. சர்க்கரையிலான பொருள்கள் சாப்பிடுவதன் மூலம் பல உடல் நல பிரச்சனைகள் நமக்கு ஏற்படும்.
  • புரோபயாடிக் நிறைந்த உணவுகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே தயிர், பாலாடைக்கட்டி, கேஃபிர், சோயா பீன், கிரீன் டீ மற்றும் டோஃபு போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுகளை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளவும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி சீராக இருக்க வேண்டும் என்றால், நமது உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். நீர் நமது நுரையீரலை ஈரப்பதமாக வைத்திருக்கவும், சளி பாதிப்பைத் தடுக்கவும் உதவியாக உள்ளது. எனவே குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீரை நீங்கள் பருக வேண்டும்.
  • வழக்கமான செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டும். இது பல்வேறு நோய்களுக்கு எதிராக உங்களைப் பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
  • நமது உடலின் பல்வேறு நோய்களுக்கு எதிராக போராடுவதற்கு உடல் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டும். எனவே 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்க வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்ச், திராட்சை போன்ற பழங்களை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

booting your immunity

மேலும் படிக்க: நெய் காபி குடிப்பதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

இதே போன்று நீங்கள் காளான், கிரின் டீ, கீரைகள், பாதாம், நெல்லிக்காய், வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளையும் உங்களது உணவு முறையில் மறக்காமல் சேர்த்துக்  கொள்வது நல்லது.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]