herzindagi
winter cold symptoms

Winter Illness In Children: குளிர்காலமும் குழந்தைகளின் உடல் நல பிரச்சனைகளும்!

<span style="text-align: justify;">ஊட்டச்சத்துள்ள உணவுகளுடன் உங்களது உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்கும் போது, உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-01-18, 18:58 IST

குளிர்காலம் வந்தாலே குழந்தைகளைப் பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் சவாலான விஷயம். என்ன தான் ஸ்வெட்டர், மப்புலர் , கிளவுஸ் போட்டுக் கொண்டு வெளியில் சென்றாலும் பல நேரங்களில் குழந்தைகளுக்கு பல தொற்று நோய்கள் ஏற்படக்கூடும்.  இது போன்ற  சூழலில் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான பாதிப்புகள் என்னென்ன? பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

winter care

குளிர்கால உடல் நலப் பிரச்சனைகள்:

  • குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சளி,காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த் தொற்றுகள் ஏற்படக்கூடும். சில குழந்தைகளுக்கு மூக்கு ஒழுகுதல், காய்ச்சல், இருமல் போன்ற உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாவதல் பெரும்பாலான குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும் தொண்டை வலி, குளிர் காய்ச்சலும் ஏற்படும். 

மேலும் படிங்க: மன ஆரோக்கியம் பாதிப்படைய காரணம் இது தான்!

  • வைரஸ் தொற்றினால் ஜலதோஷம், வைரஸ் காய்ச்சல் போன்றவற்றாலும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.
  • குளிர்ந்த காற்றில் வெளியில் செல்லும் போது குழந்தைகளுக்கு காது பகுதிகளில் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் காதில் தண்ணீர் வடிதல், காது வலி, காது கேட்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
  • குளிர்ச்சியான வானிலை குழந்தைகளுக்கு தோல் தொடர்பான சவால்களைக் கொண்டு வருகிறது. தோல் அழற்சி, தோல் வெடிப்பு மற்றும் உதடுகள் வெடிப்பு போன்றவை ஏற்படக்கூடும்.
  • குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா தொடர்பான பிரச்சனைகள் அதிகளவில் ஏற்படுகிறது. குளிர்ந்த காலநிலையில் வெளியில் செல்லும் போது தொடர்ச்சியான இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
  • வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு, காய்ச்சல் போன்ற  பாதிப்புகளும் குளிர்காலத்தில் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது.

பாதுகாப்பு முறைகள்:

குளிர்காலத்தில் சில தொற்று நோய்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க சில வழிமுறைகளையும் நீங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  • குளிர்காலத்தில் வைரஸ்கள் வேகமாக பரவக்கூடும் என்பதால் சாப்பிடுவதற்கு முன்னதாக கைகளை நன்றாக சுத்தம் செய்வதற்கு குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • கழிவறையைப் பயன்படுத்திய பின்பு சோப்புகளைக் கொண்டு கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
  • குளிர்காலத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும் போது, குளிருக்கு இதமாக ஸ்வெட்டர், மப்புலர் போன்ற ஆடைகள் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

winter illness

  • ஊட்டச்சத்துள்ள உணவுகளுடன் உங்களது உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று பாதிப்புகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
  • குழந்தைகளுக்கானத் தடுப்பூசிகளை தவறாமல் போட வேண்டும். இது காய்ச்சல் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவியாக இருக்கும்.

 மேலும் படிங்க: பெண்களே எலும்பு தேய்மானமா? இந்த பயிற்சிகளைத் தினமும் மேற்கொள்ளுங்கள் போதும்!

இது போன்ற முறையான சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும், சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடுவதன் மூலமும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு  குளிர்காலத்தில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கித் தர முடியும்.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]