herzindagi
Bone health exercise

Exercise for Bone Health: பெண்களே எலும்பு தேய்மானமா? இந்த பயிற்சிகளைத் தினமும் மேற்கொள்ளுங்கள் போதும்!

<p style="text-align: justify;"><span style="text-align: justify;">எலும்பு மற்றும் தசை வலிமை பெறுவதற்கு ஏற்றவகையில் சில எடை தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.</span>
Editorial
Updated:- 2024-01-14, 13:50 IST

இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழல் பயணித்துக் கொண்டிருக்கும் நாம், ஒரு போது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கவலை பட மாட்டோம். குறிப்பாக அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் முதல் வீட்டில் வேலை பார்க்கும் பெண்கள் வரை உடல் நலமா? அப்படின்னா என்ன? என்று கேட்கும் அளவிற்கு அக்கறை இல்லாமல் இருப்பார்கள். நாள் முழுவதும் மற்றவர்களுக்காக பணியாற்றும் இவர்கள், சில நிமிடங்களாவது அவர்களின் உடல் நலத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். 

குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு நீண்ட நேரம் நின்று கொண்டு வீட்டு வேலைகள் அனைத்தையுமே பார்ப்பதால், எலும்புகள் சீக்கிரம் தேய்மானம் ஆகிவிடுகின்றது. மூட்டு வலி அதிகமாகி சில நேரங்களில் நடப்பதற்கே மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.ஒவ்வொரு மனிதனுக்கும் எலும்புகள் தான் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கான அஸ்திவாரம் என்பதை மனதில் வைத்து எலும்புகளுக்கு வலுச்சேர்க்கும் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இதோ அதன் விபரம் இங்கே..

women bone health 

எலும்புகளுக்கு வலுசேர்க்கும் உடற்பயிற்சிகள்:

மேலும் படிங்க: குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

  • நாள் முழுவதும் நின்று கொண்டு வேலை பார்க்கச் சொன்னால் பெண்கள் எவ்வித சிரமமும் இன்றி மேற்கொள்வார்கள். ஆனால் எலும்புகள் தேய்மானம் அடைய தொடங்கினால் சில நிமிடங்கள் கூட பணியாற்ற முடியாது. இதனால் தான் சில எடை தாங்கும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்ளவும். 
  • நடனம் ஆடுவது மன அழுத்தத்தைத் தடுப்பதும் மட்டுமல்ல, உடல் எடையைக் குறைக்கவும் உதவியாக உள்ளது. நேரம் கிடைக்கும் போது வீடுகளிலேயே உங்களுக்கு தெரிந்த டான்ஸ்களை ஆடவும். இல்லையென்றால் சோசியல் மீடியாக்களில் உள்ள ஜூம்பா டான்ஸ் போன்ற பல வீடியோக்களைப் பார்த்து பயிற்சி பெற்றுக்கொள்ளுங்கள்.
  • நாம் எங்கு ஷாப்பிங் சென்றாலும் படிக்கட்டுகளில் ஏறுவதை மறந்துவிட்டோம். லிப்ட் மற்றும் எக்ஸ்கலேட்டர்களைத்(நகரும்படிக்கட்டுகள்)தான் பயன்படுத்துகிறோம்). இதனால் உடல் சோர்வடையாது. அதே சமயம் கால்களுக்கு எவ்வித பயிற்சியும் இருக்காது. எனவே எலும்புகளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக படிக்கட்டுகளில் ஏறி இறங்குகள். வெளியில் செல்ல முடியாத பெண்களாக இருந்தால் வீட்டில் உள்ள மாடிப்பட்டில் ஏறி இறங்கி பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

exercise for bone health

  • எலும்பு மற்றும் தசை வலிமை பெறுவதற்கு ஏற்றவகையில் சில எடை தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • யோகா பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளலாம்இ குறிப்பாக வாரியர் போஸ் மற்றும் சூரிய நமஸ்காரம் போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ளும் போது, எலும்புகளுக்கு சமநிலை, நெகிழ்வுத்தன்மை மற்றும் தசை வலிமைமேம்படுகிறது. 

மேலும் படிங்க: கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படுவதற்கானக் காரணம்?

இது போன்று உங்களால் முடிந்த சில பயிற்சிகளை மேற்கொண்டால் போதும், எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]