herzindagi
fatty liver symptoms

Fatty liver disease: கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படுவதற்கானக் காரணம்?

<span style="text-align: justify;">பெண்களுக்கு தோல் அரிப்பு, வேலை செய்யும் போது மூச்சுத்திணறல், உள்ளங்கைகள் சிவப்பாகுதல் போன்ற பாதிப்புகளை அதிகம் சந்திக்க நேரிடும்.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-01-13, 12:43 IST

நமது உடலில் முக்கிய அங்கம் வகிக்கும் உறுப்புகளில் ஒன்றாக செயல்படுகிறது கல்லீரல். இரதத்தில் உள்ள நச்சுக்களை உடலில் இருந்து நீக்குவதோடு வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்ளைப் பிரித்து அனைத்து உடல் உறுப்புகளும் அனுப்பும் பணிகளை மேற்காள்கிறது கல்லீரல். இதை முறையாக நாம் கவனித்துக்  கொள்ளாத போது தான் பல உடல் நலப்பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. மது அருந்துபவர்களுக்குத் தான் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படும் என்ற மனநிலையில் இருந்தோம். சமீப காலங்களாக மது அருந்தாத நபர்களும் இந்த நோய் பாதிப்பை சந்திக்கின்றனர். ஏன்? என்ன காரணம்? என இங்கே அறிந்துக் கொள்வோம்.

அதிக மது அருந்துபவர்களுக்கும், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகளவில் உட்கொள்ளும்  போது உடலில் தேவையில்லாத கொழுப்புகள் படிகிறது. உடலில் கொழுப்புகள் குறிப்பிட்ட அளவை விட அதிகமானால் அதன் செயல்பாட்டில் பிரச்சனை உண்டாகும். ஆரம்பத்திலே இந்தப் பாதிப்பை கண்டறிய முடியாது, நிலைமை முற்றிலும் போது தான் நம்மால் கண்டறிய முடியும். அதே சமயம் கல்லீரல் பாதிப்பின் ஆரம்பத்தில்  சில அறிகுறிகள் ஏற்படும். நோயின் ஆரம்பித்தில் சில அறிகுறிகள் ஏற்படும். 

மேலும் படிங்க: மூட்டு வலியால் அவதிப்படும் பெண்களே.. இதோ உங்களுக்கான வீட்டு வைத்தியம் !

fatty liver symptoms for women

கல்லீரல் கொழுப்பு நோயின் அறிகுறிகள்:

  • கல்லீரல் கொழுப்பு நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு கல்லீரல் வீக்கம், உடல் சோர்வு, மஞ்சள் காமாலை, குமட்டல், பலவீனமாக உணர்தல், எடை இழப்பு, அடிக்கடி உடல் சோர்வு போன்ற பல்வேறு பாதிப்புகளை அதிகளவில் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படக்கூடும்.
  • குறிப்பாக பெண்களுக்கு தோல் அரிப்பு, வேலை செய்யும் போது மூச்சுத்திணறல், உள்ளங்கைகள் சிவப்பாகுதல் போன்ற பாதிப்புகளை அதிகம் சந்திக்க நேரிடும். 

பாதிப்பைத் தவிர்க்க செய்ய வேண்டியது?

  • கொழுப்பு நீக்கப்பட்ட பால் போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகளைச் சேர்க்கவும்.
  • பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள், பூசணி விதைகள், சியா விதைகள் போன்ற நல்ல கொழுப்புகளைச் சேர்க்கவும்.
  • மீன், ஆலிவ் எண்ணெய் மற்றும் அரிசி தவிடு எண்ணெய் போன்ற ஒமேகா 3 ஒமேகா 6 கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்.
  • புகைபிடித்தல், மது அருந்துவதைக் குறைக்கவும்.

Fatty liver food 

இது போன்ற உணவு முறைகளை நீங்கள் ஒருபுறம் பின்பற்றினாலும் முறையான மருத்துவ பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் கல்லீரல் தொடர்பான நோய் பாதிப்பு இருப்பவர்கள், முறையான மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டுதம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிங்க: மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு!

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]