herzindagi
leg pain treatment for women

Home remedies for leg pain: மூட்டு வலியால் அவதிப்படும் பெண்களே.. இதோ உங்களுக்கான வீட்டு வைத்தியம் !.

பொட்டாசியம், கால்சியம், சோடியம் மற்றும் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் குறையும் போது மூட்டு வலி பிரச்சனைகளை நாம் அனுபவிக்க நேரிடும். 
Editorial
Updated:- 2024-01-12, 23:52 IST

இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் மூட்டு வலி. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றிரண்டு பேருக்காவது மூட்டு வலி இருக்கக்கூடும். என்ன தான் ஆயில்களைக் கொண்டு மசாஜ் செய்தாலும் வலி குறைந்தபாடில்லை என்ற வார்த்தைகளை அதிகளவில்  கேள்விப்பட்டிருப்போம். ஆண்களை விட பெண்கள் தான் அதிக வலியை அனுபவிக்கிறார்கள். மூட்டுகளில் வலி ஏற்படும் போது சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது போன்ற அனைத்து அன்றாட வேலைகளும் பாதிக்கப்படுகிறது. 

பொதுவாக நீரிழப்பு, பொட்டாசியம், கால்சியம், சோடியம் மற்றும் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் குறையும் போது மூட்டு வலி பிரச்சனைகளை நாம் அனுபவிக்க நேரிடும். இதற்கு தீர்வு காண வேண்டும் என மருந்துகளை நாம் உட்கொண்டாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த சூழலில் உணவில் சில மாற்றங்களும், சில வீட்டு வைத்தியங்களை நீங்கள் மேற்கொள்ளலாம். இதோ அதன் விபரங்கள் இங்கே..

leg pain issues

 மூட்டு வலிக்கான உணவுகள்: 

மேலும் படிங்க: பயணத்தில் சோர்வாகிறதா? இந்த டயட் லிஸ்ட் பாலோ பண்ணுங்க!

  • உடலில் கால்சியம் குறைவாக இருந்தாலும் மூட்டு வலி ஏற்படக்கூடும். எனவே உங்களது அன்றாட உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள மறந்துவிடாதீர்கள். இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பண்புகள் உள்ளதால் எலும்புகளைப் பலப்படுத்தும்.
  • மூட்டு வலியைக் குணமாக்க உங்களது உணவில் அதிகளவு வெல்லம் சேர்க்க வேண்டும். இதில் உள்ள மெக்னீசயம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை உறுதியாக்குகிறது. உடல் ஆரோக்கியத்திற்கும் உறுதியாக உள்ளது.
  • துளசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகளவில் உள்ளதால் மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது.
  • மேலும் வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த காய்கறிகள்,பழங்கள், நட்ஸ் வகைகளை உட்கொள்ளவும். இது உங்களது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். 

சிகிச்சை முறைகள்:

  • மூட்டு வலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் வீட்டிலேயே சில ஆயுர்வேத முறைகளை மேற்கொள்ளலாம். வலிக்கு நிவாரணம் பெற வேண்டும் என்றால் கருஊமத்தை சாறுடன் நல்லெண்ணெய் கலந்து லேசாக காய்ச்சி, அதிக வலி உள்ள இடங்களில் தடவும். இவ்வாறு தொடர்ந்து மேற்கொள்ளும் போது மூட்டு வலிகள் படிப்படியாக குறையக்கூடும்.
  • தேங்காய் எண்ணெய் அல்லது குளிர்தாமரை இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய்களைத் தொடர்ச்சியாக தேய்ச்சி வந்தால் வலி குறையும்.

leg pain exercise

இது போன்ற முறைகளை நீங்கள் மேற்கொண்டாலும் உடலுக்கு கொஞ்சம் உடற்பயிற்சிகள் தேவை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வாக்கிங் செல்ல முடியவில்லை என்றாலும் தினமும் படிக்கட்டுகளாவது ஏறி இறங்கினால் கால்கள் வலுப்பெறும். மேலும் உங்களால் முடிந்தால் ஸ்கிப்பிங், முழங்கால்களை குணிந்து தொடுதல், வலிகள் இருந்தாலும் கால்களை லேசாக மடக்குதல் போன்ற பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

மேலும் படிங்க: தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பெண்களே? இத பாலோ பண்ணுங்க போதும்!

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]