herzindagi
Road trip travel food items

Healthy food for Traveling: பயணத்தில் சோர்வாகிறதா? இந்த டயட் லிஸ்ட் பாலோ பண்ணுங்க!

<span style="text-align: justify;">குழந்தைகளுடன் பயணிக்கும் போது அவர்களுக்கு விருப்பமான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பழங்கள், சான்விட், சிப்ஸ் போன்றவற்றை எடுத்து செல்லவும்.</span>
Editorial
Updated:- 2024-01-10, 14:50 IST

ஊர் சுற்றுவதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. புதிய இடங்களுக்கு பயணிப்பதும், அதன் மூலம் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் பலர் விரும்புவார்கள். ஆனால் என்ன? பயணத்தின் போது ஆரோக்கியமான உணவுகள் கிடைக்காது. பயணத்தின் போது கிடைக்கும் உணவுகளை சாப்பிடும் போது பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படும். இதோ பயணத்தின் போது ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னெ்ன? என்பது குறித்து முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Healthy travel food

மேலும் படிங்க: உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப இந்த உடற்பயிற்சியை மறக்காமல் செய்திடுங்க!

பயணத்திற்கான ஆரோக்கிய உணவுகள்:

  • எந்த ஊர்களுக்கு நீங்கள் பயணித்தாலும் சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக கடலை மிட்டாய், நட்ஸ், பழங்கள், ப்ரஸ் ஜூஸ்கள் போன்ற ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைளை உடன் எடுத்து செல்லவும். விமானங்கள், ரயில்கள், கப்பல், கார், பேருந்து என எதில் நீங்கள் பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களோ? அதற்கான அனுமதிக்கப்படும் ஸ்நாக்ஸ்களை எடுத்துச் செல்வது நல்லது. இது உங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு பசியையும் கட்டுப்படுத்தும்.
  • அதிக கலோரிகள் கொண்ட உணவுப்பொருள்களைத் தவிர்க்க வேண்டும். பேக்கரி கடைகளுக்குச் செல்வதை விட சாலையோரங்கள் விற்கப்படும் இளநீர், பிரஸ்ஸான பழங்களை உட்கொள்ளுங்கள்.
  • உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என்றால், காலை உணவுகளை எப்போதும் தவிர்க்க கூடாது. ரோக்கியமான காலை உணவு உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தொடங்கி, நாளின் பிற்பகுதியில் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க உதவும்.
  • வெளி இடங்களுக்குச் செல்வது என்பது அனைவருக்கும் பிடித்தமான விஷயம் என்றாலும், பல நேரங்களில் சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 
  • பயணத்தின் போது அதிகளவு தண்ணீரை குடித்து உடலை நீரேற்றத்துடன் வைக்க வேண்டும். இது உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். பயணத்தின் போது தேவையான அளவு தண்ணீரை உடன் எடுத்துச் செல்லவும். 
  • குடும்பத்துடன் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால் ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக வீட்டில் தயாரித்த உணவுகளை பயணத்தின் போது உடன் எடுத்து செல்ல முயற்சிக்கவும்.

Travel food for children

  • குழந்தைகளுடன் பயணிக்கும் போது அவர்களுக்கு விருப்பமான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பழங்கள், சான்விட், சிப்ஸ் போன்றவற்றை எடுத்து செல்லவும். இது வெளியில் வாங்க நினைக்கும் ஸ்நாகஸ்களைக் குறைக்க உதவும்.
  • நீண்ட தூரம் பயணத்திற்கு திட்டமிட்டிருந்தால், புரதம் நிறைந்த உணவுகளை எடுத்து செல்லவும். பசியைக் கட்டுப்பத்த உதவியாக இருக்கும்.
  • சாலையோர கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். முடியாத நேரத்தில் கூட்டம் அதிகம் உள்ள கடைகளில் சாப்பிடுங்கள். பழைய உணவுகளைப் பதப்படுத்தி வைத்து பரிமாறுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

மேலும் படிங்க: மன அழுத்தம் அதிகம் உள்ளதா? இந்த இடங்களுக்குப் பயணம் செய்யுங்கள்!

இது போன்ற விஷயங்களை நீங்கள் மறக்காமல் பின்பற்றினாலே எவ்வளவு தூரம் சென்றாலும் உடல் நல பாதிப்பின்றி மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ள முடியும். 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]