herzindagi
Tips for weigt loss

Weight loss exercise: உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப இந்த உடற்பயிற்சியை மறக்காமல் செய்திடுங்க!

<span style="text-align: justify;">உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொண்டாலும் உடல் எடையை குறைக்க நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.</span>
Editorial
Updated:- 2024-01-09, 11:55 IST

இன்றைக்கு ஆண்கள் முதல் பெண்கள் வரை பெரும்பாலோனர் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது உடல் எடை அதிகரிப்பு. மாறி வரும் பழக்க வழக்கங்கள், சரியான நேரத்திற்கு உணவுகளை உட்கொள்ளாதது முதல் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது என பல காரணங்களால் நமது உடல் எடை அதிகரிக்கிறது. இதனால் அசௌகரியமான சூழல் மற்றும் பல உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

இந்நிலையில் உடலை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு நாம் முதலில் தேர்வு செய்ய வேண்டியது உடற்பயிற்சிகள் தான். நீங்களும் எப்படியாவது உடல்எடையைக் குறைக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளீர்களா?  அப்ப இந்த பயிற்சிகளையெல்லாம் தினமும் மேற்கொள்ள மறந்துவிடாதீர்கள்.

weight loss tips ()

கார்டியோ பயிற்சி:

மேலும் படிங்க: மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு!  

  • நம்மில் பலர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்தாலும் ஜிம்மிற்கு செல்ல முடியாத சூழல் இருக்கும். இந்த சூழலில் நீங்கள் ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுவது, வாக்கிங் மற்றும் நீச்சல் போன்ற கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். வெறும் வயிற்றில் இந்த பயிற்சிகளை செய்யும் போது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைவதோடு, உடலுக்குத் தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.
  • தினமும் 30 நிமிடங்கள் அல்லது 1 மணி நேரத்திற்காவது இந்த பயிற்சிகளை நீங்கள் செய்யும் போது, உடலின் ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

skipping

  • கார்டியோ பயிற்சிகளை வழக்கமாக செய்யும் போது, பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். நொறுக்குத்தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. இவ்வாறு உணவுகளின் அளவும் குறையும் போது உடல் எடையையும் இதோடு குறைய வாய்ப்புள்ளது.
  • கார்டியோ பயிற்சிகளைச் செய்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

எடை தூக்குதல் பயிற்சி:

கார்டியோ பயிற்சிக்கு அடுத்தப்படியாக நீங்கள் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகளில் ஒன்றாக ஒள்ளது எடை தூக்குதல். உங்களுக்கு முடிந்த அளவிலான எடையைத் தூக்கி ஒர்க் அவுட் செய்யும் போது தசைகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறுகிறது. உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைவதற்கு உதவியாக உள்ளது.

 weight lifting

மேற்கூறிய இரண்டு பயிற்சிகளும் உங்களது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக இருக்கும். இருந்தப்போதும் நீங்கள் முதலில் கார்டியோ பயிற்சிகளைத் தான் மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் எடை தூக்குதல் பயிற்சியை முதலில் மேற்கொள்ளும் பட்சத்தில் சோர்வடைந்து விடுவீர்கள். இதனால் எவ்வித உடற்பயிற்சிகளையும் உங்களால் மேற்கொள்ள முடியாது என்பதையும் நினைவில் வைத்து அதற்கேற்றால் போல் செயல்படுங்கள். நம்முடைய உடல் சுறுசுறுப்பாக இருப்பதற்கு உடற்பயிற்சிகள் அவசியமான ஒன்று. அதே சமயம் அளவுக்கு மீறும் பட்சத்தில் தசைகள் வேதனை முதல் வேறு பல உடல் நலப்பிரச்சனைகளும் நமக்கு ஏற்படக்கூடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 மேலும் படிங்க: குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவும் சிம்பிள் டிப்ஸ் இது தான்!    

இதுப்போன்ற உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொண்டாலும் உடல் எடையை குறைக்க நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். செரிமானத்தை சீராக்குவதோடு, நாம் சாப்பிடக்கூடிய உணவின் அளவையும் குறைவதோடு, தேவையில்லாத கலோரிகள் உடலில் சேர்வதையும் தடுக்கிறது. 

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]