herzindagi
vitamin B healthy food

Vitamin B12 Deficiency: மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு!

<span style="text-align: justify;">தினந்தோறும் மனிதர்களுக்கு 2.4 மைக்ரோகிராம் என்ற குறைந்தஅளவு மட்டுமே வைட்டமின் பி 12 தேவைப்படுகிறது.</span>
Editorial
Updated:- 2024-01-08, 13:10 IST

நமது உடலுக்குத் தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக உள்ளது வைட்டமின் பி12.  இரத்த சிவப்பணுக்கள் ஒழுங்காக செயல்படுவது  முதல் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், உடலில் டி.என்.ஏ வையும் பாதுகாக்கவும் உதவுகிறது. தினந்தோறும் மனிதர்களுக்கு 2.4 மைக்ரோகிராம் என்ற குறைந்தஅளவு மட்டுமே வைட்டமின் பி 12 தேவைப்படுகிறது. இந்த அளவும் நமக்கு குறையும் போது பல உடல் நலப்பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது.

vitamin B deficiency

வைட்டமின் பி12 குறைபாட்டின் பாதிப்புகள்:

மேலும் படிங்க: மன அழுத்தம் அதிகம் உள்ளதா? இந்த இடங்களுக்குப் பயணம் செய்யுங்கள்!

  • உடலில் முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக வைட்டமின் பி12 குறையும் போது அதிகப்படியான சோர்வு நரம்பியல் பிரச்சனைகள்,  ஞாபக மறதி, குழப்பமான மனநிலை ஏற்படும். இதோடு உடலில் இரத்த ஓட்டத்தைப் பாதிப்பதோடு கை, கால்களில் கூச்ச உணர்வு, உணர்வின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  • குறிப்பாக குளிர்காலத்தில் வழக்கத்திற்கு மாறாக உள்ளங்கால்களில் அதீத குளிரை நாம் அனுபவிக்க நேரிடும். இதுவும் வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 
  • வயிற்றில் குறைவான அளவு அமிலம் சுரப்பதும் வைட்டமின் பி12 உடல் நலப்பாதிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது. நாம் சாப்பிடும் அல்சர் மாத்திரைகளும் வயிற்றில் சுரக்கும் அமிலங்களின் அளவைக் குறைக்கிறது என்பதால் நீங்கள் உணவு முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்:

  • வைட்டமின் பி 12 குறைபாட்டை சரிசெய்ய வேண்டும் என்றால், ஊட்டச்சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பச்சை இலை காய்கறிகளிலும் போதுமான அளவு வைட்டமின் பி12 உள்ளது. உங்களது டயட்டில் காய்கறிகளை  தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பிரெஷான பழங்களிலும் வைட்டமின் பி12 உள்ளது. குறிப்பாக பீட்ரூட், பூசணிக்காய், காளான், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • புளித்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் குறைபாட்டை சரிசெய்ய முடியும்.
  • உடலுக்கு தேவையான அத்தியாவசிய உணவுகளைப் பெற வேண்டும் என்றால் தினமும் வேக வைத்த முட்டைகளைச் சாப்பிட வேண்டும். மஞ்சள் கருவில் 0.6 மைக்ரோகிராம் அளவுக்கு வைட்டமின் பி12 உள்ளதால் எப்போது சாப்பிட்டாலும் மஞ்சள் கருவுடன் முட்டைகளைச் சாப்பிட வேண்டும்.
  • பால், தயிர், சீஸ் போன்றவற்றில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது வைட்டமின் பி12 மட்டுமின்றி கால்சியம், வைட்டமின் ஏ, டி, பொட்டாசியம், ஜிங்க் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும் உள்ளது. 

Vitamin B food

சிகிச்சை முறை என்ன?  

வைட்டமின் பி 12 குறைபாட்டை சரிசெய்வதற்கு உணவு முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியமான ஒன்று. ஆனாலும் உடல் நலத்தைப் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றால் மருத்துவ சிகிச்சை அவசியம். குறிப்பாக முறையான இரத்த அளவு மற்றும் வைட்டமின் பி 12 அளவு குறித்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அளவில் மாறுபாடு இருக்கும் பட்சத்தில் மருத்துவரின் அறிவுரையின் பேரில் மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

மேலும் படிங்க: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டாப் 5  உணவுகள்?

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]