herzindagi
Nature reduce pshycological stress

Natural places reduce stress: மன அழுத்தம் அதிகம் உள்ளதா? இந்த இடங்களுக்குப் பயணம் செய்யுங்கள்!

<span style="text-align: justify;">பசுமை நிறைந்த காடுகள், புல்வெளிகள் போன்ற இயற்கை நிறைந்த இடங்களுக்குச் சென்று நேரத்தைச் செலவிடுவது, உங்களது கவலைகளைக் குறைக்க உதவும்.</span>
Editorial
Updated:- 2024-01-08, 14:34 IST

மன அழுத்தம் என்பது கொடிய நோய்களில் ஒன்றாகிவிட்டது. இன்றைய கலாச்சார மாற்றங்கள் மற்றும் பண்பாடுகளின் வேகத்திற்குப் பயணிப்பதால் ஓய்வு என்பதே இல்லை. குடும்பத் தேவைகள், குழந்தைகளின் கல்வி, எதிர்கால செலவுகள் உள்ளிட்ட பல தேவைகளைக்காக ஓய்வின்றி ஓடிக் கொண்டிருப்பதால் வாழ்க்கையில் களைப்பு ஏற்படுகிறது. இதுவே மன அழுத்தத்திற்கு முதன்மைக் காரணமாகிறது. உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.  பாடல்கள் கேட்பது, நண்பர்களுடன் சுற்றுலா செல்வது, கோவில்களுக்குச் செல்வது போன்றவற்றால் மனம் நிம்மதியை அடையலாம். அதே சமயம் இயற்கை சூழல் நிறைந்த இடங்களுக்குப் பயணிக்கும் போது நமது மனம் புத்துணர்ச்சியாவதோடு மன அழுத்தத்தையும் குறைப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது.

வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2011 மற்றும் 2019 ஆண்டுகளில் ஆய்வுகளை நடத்தியுள்ளனர். நகர்ப்புறங்களின் வசிப்பவர்களிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மன அழுத்தத்தைக் குறைக்க என்ன செய்வீர்கள்? என்பது பிரதானமாக இருந்துள்ளது. இதை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட தரவுகள், நகர்ப்புற காடுகளின் இழப்பு, சுற்றுச்சூழலைப் பாதிப்பதோடு மட்டுமில்லாமல், மக்களின் மன ஆரோக்கியத்தையும் எதிர்மறையாகப் பாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. 

Beauty of nature 

மன அழுத்தத்தைக் குறைக்கும் இயற்கை சூழல்:

மேலும் படிங்க: தலைவலியைக் குணமாக்கும் வீட்டு வைத்திய முறை!

  • என்ன தான் பிஸியாக வாழ்ந்தாலும், ஒரு அரை மணி நேரம் இயற்கை சூழல் நிறைந்த இடங்களுக்குப் பயணித்தாலே மன நிம்மதியைப் பெறுவோம். ஜில்லென்ற காற்று, அமைதியான சூழல், குக்கூ என கூச்சலிடும் பறவைகள் அனைத்தும் நம் காதுகளை இதமாக அமையும். 
  • பசுமை நிறைந்த காடுகள், புல்வெளிகள் போன்ற இயற்கை நிறைந்த இடங்களுக்குச் சென்று நேரத்தைச் செலவிடுவது, உங்களது கவலைகளைக் குறைக்க உதவும். நிறைய நேரங்கள் தேவையில்லை. 15 நிமிடங்கள் இயற்கை 
  • சூழல் நிறைந்த இடங்களுக்கு உலா வாருங்கள். உடல் ஆரோக்கியத்தோடு மன ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும்.
  • அலுவலகத்தில் அல்லது வீடுகளில் தொடர்ந்து பயணம் செய்வதால் மூளைக்கு ஒய்வே கிடைப்பதில்லை. இதற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் இயற்கை எழில் மிகுந்த இடங்கள் தான் நல்ல தேர்வு.
  • இளைஞர்களை விட வயதானவர்களுக்கு மனச்சோர்வு அதிகளவில் இருக்கும். முறையான கவனிப்பு இல்லாத போது மறதி நோயான டிமென்ஷியா பாதிப்பும் ஏற்படுகிறது. இயற்கை சூழல் நிறைந்த இடங்கள் இந்த அபாயத்தைக் குறைக்கும். வீடுகளில் தோட்ட பராமரிப்பை மேற்கொண்டால் கூட மன நிம்மதியை அடைய முடியும்.

Home gardening

  • குடியிருப்புப் பகுதியில் வெறும் 10 சதவீதம் அளவிற்குத் தோட்டங்களை வைத்துப் பராமரிப்பதன் மூலம் கடுமையான மன உளைச்சலைக் குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே பசுமையான இடங்களுக்குச் செல்லுங்கள். அதற்கான நேரம் கிடைக்கவில்லை என்றாலும் வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.
  • உங்களுக்கு அருகாமையில் உள்ள பூங்காக்கள் மற்றும் பசுமை நிறைந்த இடங்களுக்குப் பயணிக்கவும். இது உங்களுக்கு பாசிடிவ் எனர்ஜியையும் கொடுக்கும்.

மேலும் படிங்க: குளிர்காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]