herzindagi
Immunity boost food

Immunity foods in winter: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டாப் 5 உணவுகள்?

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.
Editorial
Updated:- 2023-12-29, 12:31 IST

குளிர்காலம் வந்தாச்சு. பருவ கால வைரஸ் தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு துளசி, ஆடாதொடா, ஓமம், சுக்கு மல்லி போன்ற நோயெதிர்ப்பு சக்தி பானங்களை உணவு முறையில் அதிகளவில் சேர்க்க ஆரம்பித்துவிட்டோம். கொரோனா தொற்றிற்குப் பிறகு,  நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் தான், எவ்வித வைரஸ் தொற்றுகளும் எளிதில் நம்மை நெருங்காது என மனநிலைக்கு வந்துவிட்டோம். இதனால் தான் என்னவோ? குளிர்காலத்தில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் உணவுகள் என்னென்ன? என கூகுளில் தேட ஆரம்பிக்கிறோம். இதோ உங்களுக்காகவே நோய் மண்டலத்தைப் பாதுகாக்கும் ஆரோக்கிய உணவுகளை இங்கே பட்டியலிடுகிறோம்.. 

immunity food list

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்:

எள்: 

  • குளிர்காலத்தில் உடலை சூடாகவும், வலுவாகவும் வைத்திருப்பதற்கு எள் சிறந்த தேர்வாக உள்ளது. இதில் உள்ள கால்சியம்,  மெக்னீசியம் தற்றும் இரும்புச்சத்துக்கள் உடலுக்கு வலுவைத் தருகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்பெற செய்கிறது.
  • இதில் கால்சியம் சத்துக்களும் அதிகளவில் உள்ளதால் எலும்புகளை வலுப்பெற செய்வதோடு, குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டுவலிக்குத் தீர்வாக அமைகிறது.  உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்திற்கும் எள் பயனுள்ளதாக உள்ளது.
  • எனவே நீங்கள் எள் உருண்டை, எள்ளு பொடி, எள்ளு மிட்டாள் என உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

மேலும் படிங்க: பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் நெல்லிக்காய் ஜூஸ்!

வெல்லம்: 

  • வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில் உங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வெல்லம் சிறந்தது. இதில் உள்ள இரும்புச்சத்து நமக்கு ஆற்றலை வழங்குகிறது. 
  • எனவே தினமும் நீங்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் டீ குடிக்கும் போது சர்க்கரையை சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • நாட்டுச்சர்க்கரை, அச்சுவெல்லம், கருப்படி என உங்களுக்கு எது பிடிக்கிறதோ? அதைச் சேர்த்துக்கொள்ளுங்கள். 
  • குளிர்காலத்தில் அசௌகரியமான நிலை இருந்தால், சிறிதளவு சர்க்கரையை சாப்பிடவும். இதனால் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். மேலும் குளிர்காலத்தில் உங்களது உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கிறது.

வேர் காய்கறிகள்: 

Root vegetables

  • கேரட், உருளைக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட் போன்ற வேர் காய்கறிகளில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவில் உள்ளது. மேலும் உடலுக்குத் தேவையான ஆற்றலை நமக்கு வழங்குகிறது.
  • இதில் உள்ள வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி, சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் மாங்கனீசு சத்துக்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. எலும்புகள் வலுப்பெறவும் உதவியாக உள்ளது.

கீரை:

குளிர்காலத்தில் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றால் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அகத்திக் கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை, சிறு கீரை, அரைக்கீரை என உங்களது எந்த கீரை கிடைக்கிறதோ? அவற்றைக் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், எலும்புகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள்:

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றால், வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற பழங்களை ஜூஸாகக்கூட பருகலாம். 

 மேலும் படிங்க: ஜிம் வேணாம்.. குளிர்காலத்தில் எடையைக்குறைக்க இந்த சமையல் பொருள்கள் போதும்!..

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]