பருவநிலை மாற்றத்தால் இத்தாண்டு வழக்கத்தை விட அதிக குளிர் நிலவுகிறது. மப்புலர், ஸ்வெட்டர் இல்லாமல் அதிகாலையில் வெளியில் செல்லக்கூடிய முடியவில்லை. அதிலும் அவ்வப்போது மழையும் பெய்வதால் வீடுகளுக்குள் உள்ளே தான் முடக்கி இருக்கிறோம்… இதோடு குளிருக்கு இதமாக நொறுக்குத் தீனிகளையும், பஜ்ஜி, வெங்காய பக்கோடா, போன்ற எண்ணெய் பலகாரங்களும் தான் குளிர்காலத்தில் பிரதான இடம் பெறுகிறது..
சாப்பிடக்கூடாது என்று நினைத்தாலும் மனம் நொறுக்குத்தீனிகளைப் பார்த்தாலே அலைபாய்கிறது. இதனால் மற்ற பருவ காலங்களை விட குளிர்காலத்தில் உடல் எடை கணிசமாக அதிகரிக்கிறது. உடற்பயிற்சியும் இல்லாததால் உடலில் தேவையில்லாத கொழுப்புகளும் சேர்ந்துவிடுகிறது. இதுப்போன்ற சூழல் நிச்சயம் உங்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறோம். இனி அந்த கவலை வேண்டாம். உடல் எடையைக் குறைக்க ஜிம்மிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்களது வீடுகளில் உள்ள சமையல் பொருள்களின் மூலம் செய்யக்கூடிய பானங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். இதோ என்னென்ன என அறிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிங்க: பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் நெல்லிக்காய் ஜூஸ்!
சில நேரங்களில் நாம் சாப்பிடக்கூடிய உணவு ஜீரணமாகிவிடில் பெருஞ்சீரகத்தைத் தான் சாப்பிடுவோ். இது உடலில் செரிமானத்தை உதவுகிறது. எனவே தினமும் காலையில் நீங்கள் காலையில் பெருஞ்சீரக விதைகளை தண்ணீரில் காய்ச்சிக் குடிக்கும் போது நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கிறது. மேலும் பசியைக் கட்டுப்படுத்தி அதிக உணவு உள்கொள்வதைத் தடுக்கிறது
நம் வீட்டு சமையல் அறையில் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப்பொருள்களாக உள்ளது இஞ்சி மற்றும் எலுமிச்சை. இவை இரண்டும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. செரிமானத்தையும் எளிதாக்குகிறது. எனவே தினமும் காலையில் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறை நன்றாக தேநீர் போன்று காய்ச்சி பருகலாம். நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாகவும், தேவையில்லாத நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
வெதுவெதுப்பான நீரில் இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்து தயாரிக்கும் பானம் உடல் எடைக்குறைப்பிற்கு பேருதவியாக உள்ளது. தேன் செரிமான சக்தியை சீராக்குகிறது. இலவங்கப்பட்டை உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக்கி உடலை நாள் முழுவதும் உற்சாக வைக்கிறது. தேவையற்ற கொழுப்புகளையும் கரைக்க உதவுகிறது
குளிர்காலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப்போராடவும், உடல் எடையைக் கட்டுக்கள் வைத்திருக்கவும் மிளகு ரசம் உங்களுக்கு பேருதவியாக அமையும்.
மேலும் படிங்க: ஜாக்கிரதை பெண்களே.. இதெல்லாம் சிறுநீர்ப்பாதை தொற்றின் அறிகுறிகளாம்!
எனவே இதுப்போன்ற உங்களது வீடுகளில் உள்ள சமையல் பொருள்களைக் கொண்டு சூடான பானங்களைப் பருகி உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கவும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]