குளிர்காலம் வந்தாலே நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு, நம்முடனே பல வைரஸ் தொற்றுகளும் உடன் சேர்ந்துவிடும். குறிப்பாக அயராது உழைக்கும் பெண்களுக்கு வைரஸ் தொற்று ஏதேனும் ஏற்பட்டால் வீட்டின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும்..அனைத்து வேலைகளும் அப்படி அப்படியே நின்றுவிடும். இதனால் தான் பெண்கள எப்போதுமே தங்களின் உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இன்றைக்கு பெண்களின் உடல் நலத்திற்குப் பலன் தரக்கூடிய நெல்லிக்காய் ஜூஸின் அற்புத குணங்கள் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
மேலும் படிங்க: பெண்களுக்கு புரத உணவுகள் ஏன் அத்தியாவசிமானது தெரியுமா?
இதுப்போன்று பல்வேறு பண்புகளை நெல்லிக்காய் கொண்டுள்ள நிலையில், வீடுகளிலேயே நெல்லிக்காய் ஜூஸ்ஸை நாம் எளிதில் தயார் செய்துவிடமுடியும். இதோ அதற்கான செய்முறை இங்கே.
முதலில் நெல்லிக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் வெட்டிய ஆம்லா அதாவது நெல்லி, தேன், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரைக்கவும்.
இறுதியில் அரைத்த எலுமிச்சை சாற்றை ஒரு டம்ளரில் வடிகட்டினால் போதும் ஆரோக்கியமான நெல்லிக்காய் ஜூஸ் ரெடி.
மேலும் படிங்க: குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் உபயோகிப்பதால் இத்தனை நன்மைகளா?
நெல்லிக்காயில் வைட்டமின்கள், மினரல்ஸ்கள், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கரோட்டின், வைட்டமின் பி, ஈ மற்றும் ஏ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]