Protein foods for women: பெண்களுக்கு புரத உணவுகள் ஏன் அத்தியாவசிமானது தெரியுமா?

சராசரியாக பெண்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 50 கிராம் அளவிற்கு புரதம் தேவைப்படுகிறது.

protein foods for ladies

இவ்வுலகில் ஆண்களை விட பெண்கள் தான் 24 மணி நேரமும் அயராது வேலைசெய்கிறார்கள். சமைப்பது முதல் குழந்தைப் பராமரிப்பு, அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலைகள் என அவர்களின் பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உடல் வலுவோடு இருக்கும் போது எவ்வளவு வேண்டுமானாலும் வேலைகளை இன்முகத்தோடு செய்யமுடியும். அதே சமயம் நாள்கள் செல்ல செல்ல உடல் வலிமையற்று சோர்வாகி விடும். இதுப்போன்ற நிலையை சரிசெய்ய வேண்டும் என்றால் பெண்கள் கட்டாயம் புரதம் நிறைந்த உணவுகளை தங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சராசரியாக பெண்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 50 கிராம் அளவிற்கு புரதம் தேவைப்படுகிறது. நமது உடலில் உள்ள உயிரணுக்களுக்கு ஆற்றலை வழங்குவதல் முதல் பல்வேறு உடல் செயற்பாடுகளுக்கு புரதம் மிகவும் இன்றிமையாத ஒன்று. குறிப்பாக பெண்களுக்கு எடை மேலாண்மை, எலும்பு ஆரோக்கியம், முடி வளர்ச்சி, சரும பராமரிப்பு மற்றும் நகங்களின் ஆரோக்கியம் போன்ற அனைத்திற்கும் புரதம் இன்றிமையாத ஒன்றாக உள்ளது. எனவே தான் பெண்களுக்கு அவர்களின் உணவு முறையில் அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகள் தேவைப்படுகிறது. இதோ பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் புரோட்டீன் நிறைந்த உணவுகளின் லிஸட் இங்கே.

high proten foods for women

புரதம் நிறைந்த சைவ உணவுகள்:

  • பால், பன்னீர், பச்சைப் பட்டாணி,சுண்டல், சிவப்புக் காராமணி போன்ற பயிறு வகைகளில் புரோட்டீன் அதிகளவில் உள்ளது.
  • புரோக்கோலியில் அமினோ அமிலங்கள்,நார்ச்சத்துக்கள் மற்றும் அதிக புரத சத்து இருப்பதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
  • கேழ்வரகு எனப்படும் ராகியில் புரதசத்துக்கள் உள்பட கால்சியம், வைட்டமின்கள், அயர்ன் போன்ற சத்துக்கள் உள்ளது. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் போது பெண்களுக்கு எலும்புகள் வலுப்பெறும்.
  • கீரையில் புரோட்டீன் உள்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக உள்ளது.
  • பாதாம், முந்திரி,பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளையும் உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

புரதம் நிறைந்த அசைவ உணவுகள்:

சிக்கன், மாட்டிறைச்சி, மீன்கள், முட்டை போன்ற அசைவ உணவுகளில் புரதம் அதிகளவில் உள்ளதால் பெண்களின் எலும்புகள் வலுப்பெற உதவியாக உள்ளது.

நன்மைகள்:

protein foods list

பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற அறிவியல் ஆய்வுகளின் படி, அதிக புரத உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வதால் பெண்கள் பல்வேறு நன்மைகளைப் பெறுகின்றனர். குறிப்பாக குழந்தைப் பிறப்பிற்குப் பின்னதாக ஏற்படும் உடல் எடையைக் குறைக்கவும், கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வதையும் தடுக்கிறது. இதில் உள்ள கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பெண்களின் எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்பெற செய்கிறது.

மேலும் படிங்க:நீங்கள் புத்திசாலியா? கண்டறிய உதவும் சில குணாதிசயங்கள்!

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP