Vitamin D Deficiency : வைட்டமின் டி குறைபாட்டால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்?

வைட்டமின் டி குறைபாட்டால் பெண்களுக்கு உடல் மற்றும் மனச்சோர்வு, உறக்கமின்மை, எலும்பு வலி, முடி கொட்டுதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

vitamin D Health care

சூரிய ஒளியின் கீழ் நின்று வியர்வைச் சொட்டும் அளவிற்கு உழைத்தக் காலங்கள் அனைத்தும் மலையேறிவிட்டது. எவ்வித உடல் உழைப்பும் இன்றி ஏசி ரூம் மற்றும் பேன்களுக்கு அடியில் உட்கார்ந்து வேலைப்பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது தான் பல உடல் நலப்பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக மக்கள் பலரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் உள்ள வைட்டமின் டி குறைபாடு என்னென்ன பாதிப்புகளைத் தரக்கூடும் என்பது பற்றிய முழு விபரங்கள் இங்கே.

vitamin D dficiency

நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் தேவைப்படும் மிக முக்கியமான வைட்டமின்களில் ஒன்து தான் வைட்டமின் டி. சராசரியாக ஒருவருக்கு வைட்டமின் டி 30 நானோகிராம் அளவிற்கு இருக்க வேண்டும். அதற்கும் கீழ் குறைவதைத் தான் வைட்டமின் டி குறைபாடு பாதிப்பு என்கிறோம். இவற்றை உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் சரி செய்ய முடியும். அதே சமயம் 20 நானோகிராம் வரை வைட்டமின் டி குறைாபடு ஏற்படும் பட்சத்தில், முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பாதிப்பை சரிசெய்யாவிட்டால் சர்க்கரை நோய் , எலும்பு அழற்சி, தசை வலுவிழப்பு, தசைவலி, மற்றும் சுவாசம் தொடர்பான தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்:

  • சோர்வு, பலவீனம், நோய் எதிர்ப்பு குறைபாட்டின் காரணாக அடிக்கடி நோய் வாய்ப்படுதல், மூட்டு வலி, எலும்பு பலவீனமாகுதல் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் வைட்டமின் டி குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
  • குறிப்பாக பெண்களுக்கு உடல் மற்றும் மனச்சோர்வு, உறக்கமின்மை, எலும்பு வலி, முடி கொட்டுதல், தசை பலவீனம், பசியிழப்பு, எளிதில் நோய் வாய்ப்படுதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

சிகிச்சை முறைகள்:

  • எனவே நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே உடலில் வைட்டமின் டி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மருந்து, மாத்திரைகள் ஒருபுறம் நீங்கள் சாப்பிட்டாலும் சூரிய ஒளியின் மூலம் வைட்டமின் டி பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் நமக்கு சூரிய ஒளி அதிகமாக கிடைக்கும். எனவே இந்த நேரங்களில் நீங்கள் அதிக நேரம் சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.
vitamin D sun
  • சூரிய ஒளியின் வெளிச்சத்தால் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்று சன்ஸ்கிரீன் லோஷன் மற்றும் கிரீம்களை பெண்கள் பயன்படுத்துகின்றனர். இது சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்வதற்கு உதவுகிறது என்றாலும் வைட்டமின் டி யை நீங்கள் பெற முடியாது. இந்த குறைபாடு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
  • நோயின்றி வாழ்வதற்கு உடல் உழைப்பும் கொஞ்சம் அவசியம். அதற்கேற்ற சூழல் அமையவில்லை என்றாலும் நீங்கள் உங்களால் முடிந்தவரை சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிங்க:பெண்களைப் பாதிக்கும் தைராய்டு; பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்!

மேலும் பால், முட்டை, காய்கறிகள்,காளான், மீன் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் வைட்டமின் டி குறைபாட்டிற்கான மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இதனால் இதய பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP