image

Hair Growth Oil: இளநரை முதல் முடி வளர்ச்சிக்கு உதவும் கீரை எண்ணெய்; வீட்டிலேய சுலபமாக தயாரிக்கும் முறை!

அதிகப்படியான மாசுபாடு, உணவுப்பழக்க வழக்கம், முறையற்ற தூக்கம், பொடுகுத் தொல்லை போன்ற பல்வேறு காரணங்களில் பெண்களுக்கு முடி உதிர்தல் ஏற்படுவதோடு இளம் வயதிலேயே நரை முடி பிரச்சனையையும் எதிர்கொள்கின்றனர்.
Editorial
Updated:- 2025-11-22, 22:37 IST


பெண்களுக்கு என்ன தான் விதவிதமான ஆடைகள் அணிந்தாலும், அவற்றை மிகவும் மிடுக்கோடு காட்ட வேண்டும் என்றால், அவற்றிற்குப் பேருதவியாக இருப்பது அவர்களின் கூந்தல். “ கார் கூந்தல் அழகுடையாள்” என்ற கூற்றிற்கு ஏற்ப பெண்களின் கூந்தல் கருமையாகவும், நீளமாகவும் இருப்பது அவர்களை மிகவும் அழகாகக் காட்டும்.

ஆனால் இக்காலத்துப் பெண்கள் மாடர்ன் கலாச்சாரம் என்கிற பெயரில் தலைமுடிக்கு கலர் அடிப்பது, தலைமுடியை வெட்டி விடுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். அதெல்லாம் ஒரிரண்டு ஆண்டுகள் தான். அதற்கடுத்தாற் போல் முடி உதிர்வு ஏற்பட்டாலும், இளம் வயதிலேயே நரை முடி ஏற்பட்டாலும் அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படும். இவற்றிற்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக எத்தனையோ சிகிச்சை முறைகளை மேற்கொள்வார்கள். சில நேரங்களில் எவ்வித தீர்வும் எட்டாது. என்ன செய்யலாம் என்ற தேடலில் இருந்தால் வீட்டிலேயே மிகவும் எளிமையாக கீரை எண்ணெய் அல்லது கீரை தைலம் காய்ச்சிப் பயன்படுத்தலாம். அதிகப்படியான மாசுபாடு, உணவுப்பழக்க வழக்கம், முறையற்ற தூக்கம், பொடுகுத் தொல்லை போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் தலைமுடி பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்.

 


கீரை எண்ணெய் தயாரிக்கும் முறை:

  • அரைக்கீரை - ஒரு கப்
  • பொன்னாங்கன்னி கீரை - ஒரு கப்
  • வெந்தயக் கீரை - ஒரு கப்
  • கறிவேப்பிலை - ஒரு கப்
  • கற்பூரவல்லி - ஒரு கப்
  • தேங்காய் எண்ணெய் - ஒரு கப்

மேலும் படிக்க: குளிர்காலத்தில் முகத்தை எப்போழுது பளிச்சென்று வைத்திருக்க 5 வீட்டு வைத்தியங்கள்

  • தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் கீரை எண்ணெய் தயார் செய்வதற்கு முதலில் மேற்கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • பின்னர் ஒரு பெரிய கடாயில் அல்லது பெரிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ச்சிக் கொள்ளவும். கொஞ்சம் சூடு ஏறியதும் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள தேங்காய் அரைக்கீரை,பொன்னாங்கன்னி, வெந்தயக்கீரை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி போன்றவற்றைச் சேர்த்து பச்சை நிறம் மாறாமல் நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பின்னர் இதை ஒரு பாட்டிலில் ஊற்றி ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருக்கவும்.
  • எண்ணெய் நன்கு தெளிந்து வந்ததும் அதை ஒரு பாட்டிலுக்கு மாற்றி உபயோகிக்க ஆரம்பிக்கலாம். இதை உச்சந்தலையில் இருந்து நுனி வரை தேய்த்து ஒரு மணி நேரத்திற்குப் பின்னதாக சீயக்காய் தேய்த்து குளித்தால் போதும். எந்த காரணத்திற்காக ஏற்படும் கூந்தல் உதிர்வைத் தடுத்துவிடும்.

மேலும் படிக்க: Hair care tips: ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த குறிப்புகள்

தலைமுடியை எப்படி கீரை எண்ணெய் பாதுகாக்கிறது?

சரியான உணவு பழக்கம் இல்லாமல் ஏற்படக்கூடிய ரத்த சோகைப் பாதிப்பாலும் சிலருக்கு முடி கொட்டு விடும். அரைக்கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளித்து முடி உதிர்வதைத் தடுக்கிறது. இளம் வயதில் ஏற்படக்கூடிய இளநரையை கறிவேப்பிலைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தால் முடி கொட்டுதல் பிரச்சனையைச் சந்திக்க நேரிட்டால் பொன்னாங்கன்னி உதவியாக இருக்கும். பொடுகுத் தொல்லையால் ஏற்படும் முடி உதிர்வை வெந்தயக்கீரை தடுக்கிறது. இதோடு போன்று முறையற்ற உணவு பழக்கங்களால் ஏற்படும் பாதிப்பை கற்பூரவல்லி தடுக்கிறது.

Image source - Freep

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]