herzindagi
women affect thyroid

Thyroid diet: பெண்களைப் பாதிக்கும் தைராய்டு; பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்!

<p style="text-align: justify;"><span style="text-align: justify;">மூளை, இதயம், தசைகள் உள்பட பிற உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களைத் தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது.</span>
Editorial
Updated:- 2023-12-19, 13:50 IST

ஆண்களை விட அதிக மனவலிமைக் கொண்டவர்கள் பெண்கள் தான். எந்த சூழலையும் அசால்டாக கடந்து செல்லும் இவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றங்களால் மனதளவிலும், உடல் அளவிலும் பல பாதிப்பை சந்திக்கின்றனர். அதில் ஒன்று தான் தைராய்டு. திடீரென உடல் அதிகரிப்பு மற்றும் உடல் மெலியும் போது தான் ஏதோ பாதிப்பைச் சந்திக்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். இவற்றிற்கு சிறந்த உதாரணம் தான் தைராய்டு. ஏன் இந்த பாதிப்பு ஏற்படுகிறது? கட்டுப்பாடுடன் இருக்க உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்த சில விபரங்கள் இங்கே… 

 thyroid diet

பெண்களும் தைராய்டு பாதிப்புகளும்:

  • மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவிலான ஓர் சுரப்பி தான் தைராய்டு. நம்முடைய மூளை, இதயம், தசைகள் உள்பட பிற உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களைத் தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. இவை முறையாக செயல்படாத போது தான் உடலில் பல மாற்றங்களை நாம் சந்திக்க நேரிடும்.
  • நமது உடலில் தைராய்டு சுரப்பி சீராக சுரக்க வேண்டும். ஒருவேளை அளவுக்கு அதிகமாக மாறும் போது ஹைப்பர் தைராய்டிசம் எனவும், தைராய்டு சுரப்பி குறைவாக இருந்தார் ஹைப்போ தைராய்டிசம் எனப்படுகிறது. இந்த பாதிப்புகளைப் பெண்கள் சந்திக்கும் போது தான் மாதவிடாய் சுழற்சியில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் பல மாதங்களுக்கு வரவே செய்யாது. இதைத் தான் மருத்துவர்கள் அமினோரியா நிலை என்கின்றனர்.
  • இதோடு மட்டுமின்றி தைராய்டு பிரச்சனைகள்  ஏற்படும் போது வேறு பல பிரச்சனைகளையும் பெண்கள் சந்திக்கின்றனர். குறிப்பாக ஹைப்பர் தைராய்டிசத்தில் உடல் பருமன் அதிகரிப்பு,சோர்வு, அதிக தூக்க உணர்வு, சுறுசுறுப்பின்மை, மாதவிடாய் காலத்தில் மாற்றம் மற்றும் முடி உதிர்தல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மேலும் படிங்க: இளம் பெண்களை குறிவைக்கும் பிசிஓஎஸ்..எச்சரிக்கும் மருத்துவர்கள்!

  • இதே போன்று ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு ஏற்பட்டால் உடல் எடை குறைதல், கை, கால் நடுக்கம், பார்வை மங்குதல், சோர்வு போன்ற பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இவற்றிற்கு நீங்கள் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் மருத்துவர்களின் பரிந்துரைகளின் படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். ஆனாலும் முறையான உணவு முறைகள் இல்லையென்றால் பாதிப்பைக் கட்டுப்படுத்தவே முடியாது.

தைராய்டும் உணவு முறைகளும்:

  • ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள், அயோடின் நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக அயோடின் உப்பு,மீன், கடற்பாசி அல்லது கெல்ப், அயோடின் சப்ளிமெண்ட்ஸ், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் கருப்படி போன்றவற்றைத் தவிர்க்க வேணடும்.
  • பால்: பால், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் ஆகியவை தைராய்டு சுரப்பிக்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் தைராய்டு அளவை சீராக்குகிறது.

thyroid food

  • வாழைப்பழம்: இதில் உள்ள வைட்டமின்கள், செலினியம்,பிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால் தைராய்டு பிரச்சனைகளைச் சீராக்குகிறது. 
  • நெல்லிக்காய்: தைராய்டு பாதிப்பால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு முடி உதிர்தல் பிரச்சனையும் அதிகளவில் இருக்கும். எனவே நீங்கள் நெல்லிக்காயை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிங்க: இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களே…இதோ உங்களுக்கானத் தீர்வு!

பச்சைக்காய்கறிகள், நட்ஸ் வகைகள், முளைக்கட்டிய பயிறுகள், சிறுதானியங்கள், கீரைகள், போன்றவற்றை மறக்காமல் உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]