நவீன கலாச்சாரம் என்கிற பெயரில் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் நமக்கு பல்வேறு உடல் நலப்பாதிப்புகளைத் தான் நமக்கு ஏற்படுத்துகிறது. குறிப்பாக இன்றைக்குப் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது பிசிஓஎஸ் பாதிப்பும், இதனால் ஏற்படும் குழந்தைப் பிறப்பு தாமதமும். முன்பெல்லாம் திருமணமாகி ஒரு ஆண்டிற்குள் குழந்தைகள் பிறக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் 10 ஆண்டுகள் ஆகியும் பலர் குழந்தை இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்றைய கலாச்சாரம், உணவுப்பழக்க வழக்கங்களும் தான் இதற்கெல்லாம் முதன்மைக் காரணமாக அமைகிறது.
சமீபத்தில் 18 வயதுகளில் உள்ள பெண்களை ஆய்வு செய்த போது அதில் குறைந்தது 5 பேருக்காவது பிசிஓஎஸ் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏன் இந்த பாதிப்பு ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும் என்று அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதோ உங்களுக்கான சில விபரங்கள் இங்கே..
மேலும் படிங்க: அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவைக்குறைக்க உதவும் எளிய டிப்ஸ்!
பாலிசிஸ்டிக் ஓவரின் சின்ட்ரோம் எனப்படும் பிசிஒஸ் பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் பெண்களுக்கு இயல்பைக் காட்டிலும் ஆண் ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது. இதோடு பெண்களுக்கு முகத்தில் முடி வளர்தல், முகப்பரு, மலட்டுத்தன்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. சிறு வயதில் ஏற்படக்கூடிய உடல் பருமனும் பிசிஓஎஸ் பிரச்சனை ஓர் காரணமாக உள்ளது.
அக்காலத்துப் பெண்களை ஒப்பிடும் போது இன்றைக்கு உடல் உழைப்பு என்பது பெண்களிடம் சுத்தமாக உள்ளது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை, நொறுக்குத் தீனிகள், எண்ணெய் பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதும் பிசிஓஎஸ் பிரச்சனைக்கு ஒரு காரணமாக அமைகிறது. இவற்றை முறையாக கவனித்துக்கொள்ளாத போது தான், கருமுட்டை வெளியேறாமல் பெண்களுக்கு குழந்தைப் பிறப்பில் தாமதம் ஏற்படுகிறது.
மேலும் படிங்க: உஷார் பெண்களே.. தலைமுடிக்கு கலரிங் செய்வதால் இத்தனைப் பாதிப்புகள்!
இதுப்போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே மருந்து, மாத்திரைகள் இருந்தாலும் பெண்களின் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றம் வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள் சாப்பிடுவதோடு வழக்கமான உடற்பயிற்சிகளை நீங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இது இளம் வயதில் ஏற்படும் பிசிஓஎஸ் பாதிப்புகளுக்குத் தீர்வாக அமையும். ஒருவேளை நீங்கள் முறையான சிகிச்சை மேற்கொள்ளாத பட்சத்தில் 40 வயதிற்கு மேல் டயாபடீஸ் 2 மற்றும் இதய பாதிப்புகள் அதிகம் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சில நேரங்களில் பெண்களுக்கு எரிச்சல், மன பதட்டம், சோர்வு போன்ற பாதிப்பகளும் ஏற்படக்கூடும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]