herzindagi
fat control plan

Reduce High Cholesterol : அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவைக்குறைக்க உதவும் எளிய டிப்ஸ்!

<span style="text-align: justify;">ஊட்டச்சத்துள்ள உணவுகள் உங்களது உடல் எடையை ஒருபோதும் அதிகரிக்க செய்யாது.</span>
Editorial
Updated:- 2023-12-18, 22:10 IST

இன்றைக்கு உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் அவற்றிற்காக என்ன செய்கிறோம்? என்று கேட்டால் அதற்கானப் பதில் யாரிடமுமே இல்லை. ஆம் முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்? டயட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் தினமும் கடைப்பிடிப்பது என்பது பெரும் சவாலான விஷயம். 

அதிலும் தற்போதுள்ள குளிர்காலத்தில் வழக்கமாக செய்யக்கூடிய பணிகளைக் கூட செய்ய முடியாது. சூடாக சாப்பிட வேண்டும், குளிருக்கு இதமாக ஏதாவது நொறுக்குத் தீனிகளைச் சாப்பிட வேண்டும் என்று தான் நினைப்போம். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்து நம்முடைய உடல் எடையும் அதிகரிக்கிறது.இவ்வாறு அதிகரித்த உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான எளிய டிப்ஸ்..

மேலும் படிங்க:இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களே…இதோ உங்களுக்கானத் தீர்வு!

fat diet tips

கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் டிப்ஸ்கள்!

  • நெல்லிக்காய்: பல்வேறு நோய்களுக்குத் தீர்வு காண உதவும் கனிகளில் ஒன்று தான் நெல்லி. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.நெல்லிக்காயை ஜூஸ், ஊறுகாய் போன்ற பல்வேறு முறைகளில் செய்து சாப்பிடும் போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையக்கூடும். அனைத்து சீசன்களிலும் நெல்லிக்காய் கிடைக்காது என்பதால் நெல்லிக்காய் பொடியை வாங்கி வைத்து நீங்கள் உங்களது உணவு முறையில் தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பூண்டு: சமையல் அறையில் கிடைக்கும் மசாலா பொருள்களில் ஒன்று தான் பூண்டு. இதில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. தினமும் காலை அல்லது இரவு தூங்கும் போது பூண்டு பால் காய்ச்சிக்குடிக்கும் போது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். அதே சமயம் தூக்கமின்மையும் உங்களுக்கு ஏற்படாது.
  • இலவங்க பட்டை டீ: உணவின் சுவை மற்றும் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் இலவங்கப்பட்டை உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைக்க உதவியாக உள்ளது. எனவே நீங்கள் தினமும் இலவங்கபட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து சூடாக பருகலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கவும் உதவுகிறது.
  • க்ரீன் டீ: உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் முதன்மை தேர்வாக இருப்பது க்ரீன் டீ தான். இதில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் நம்முடைய இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதையும் தடுக்கும். எனவே நீங்கள் உடலில்  அதிகரித்த தேவையில்லாத கொழுப்பைக்குறைக்க வேண்டும் என்றால் தினமும் க்ரீன் டீயை அருந்த வேண்டும்.
  • ஊட்டச்சத்துள்ள உணவுகள்: வைட்டமின்கள் , கால்சியம், புரதம் நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இதுப்போன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகள் உங்களது உடல் எடையை ஒருபோதும் அதிகரிக்க செய்யாது.

மேலும் படிங்க: உஷார் பெண்களே.. தலைமுடிக்கு கலரிங் செய்வதால் இத்தனைப் பாதிப்புகள்!

இதுப்போன்ற உணவு முறைகளை உங்களது அன்றாட வாழ்க்கையில் பின்பற்றினாலும்,வாக்கிங், ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளையும் நீங்கள் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]