herzindagi
sk in   glowi n g  j uic e

Juice for glowing skin: இந்த ஜூஸ் குடிங்க.. குளிர்காலத்தில் சருமம் பிரகாசமாகுமாம்!

<span style="text-align: justify;">குளிர்காலத்தில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் சருமம் வறண்டுவிடும்.</span>
Editorial
Updated:- 2023-12-23, 22:48 IST

”மதி போன்ற முகம் உடையவள் என்று பெண்களை” வர்ணிப்பதில் எவ்வித தவறும் இல்லை. கருப்போ? சிவப்போ? எப்படிப் பார்த்தாலும் பெண்கள் அழகாகவே தெரிவார்கள். இந்த அழகிற்கு மேலும் அழகுச் சேர்க்கும் விதமாக அவர்கள் மேற்கொள்ளும் சரும பராமரிப்புகள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்தது. ஆனால் என்ன? குளிர்காலம் வந்துவிட்டால் அவர்களின் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு அவர்கள் அதிகம் மெனக்கெடுவார்கள்.

அதிலும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான குளிர்காலத்தில் கிறிஸ்துமஸ், மார்கழி பிராத்தனைகள், வைகுண்ட ஏகாதசி, ஆங்கில புத்தாண்டு என கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது. ஆண்களை விட பெண்கள் தான் இந்நாளில் அதிகாலையில் எழுவார்கள். இதனால் அவர்களின் சருமம் வறண்டு விடக்கூடும். மேலும் உடலின் உட்புறத்தில் வறண்ட வெப்பம் மற்றும் வெளியில் குளிர்ச்சியான சூழல் ஏற்படுவதால் நமது தோல் மந்தமாகவும், வறண்டு போய்விடும். இதுப்போன்ற நேரத்தில் உங்களை சருமத்தைப் பாதுகாக்க ஆப்பிள், பீட்ரூட்,கேரட் கொண்டுசெய்யப்படும் ஏபிசி (ABC) ஜூஸ் நல்ல தேர்வாக அமையும்.

abc juice

ABC ஜூஸின் பயன்கள்:

மேலும் படிங்க: உஷார் பெண்களே.. தலைமுடிக்கு கலரிங் செய்வதால் இத்தனைப் பாதிப்புகள்!

  • பொதுவாக குளிர்காலத்தில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் சருமம் வறண்டுவிடும். இந்நேரத்தில் நீங்கள் ஏபிசி ஜூஸை தேர்வு செய்யலாம். ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட்டில் உள்ள நீர்ச்சத்துக்கள், உங்களது உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.
  • இந்த பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல்வேறு வைட்டமின்கள் உள்ளதால் பாக்டீரிய தொற்றுகளோடு எதிர்த்துப் போராடுகிறது. மேலும் சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
  • பீட்ரூட்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனைகள் மற்றும் முகப்பருக்களைக் குறைக்க உதவுகிறது. இதே போன்று கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
  • ஆப்பிள் ,பீட்ரூட் மற்றும் கேரட்டில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. எனவே உடல் நலப்பிரச்சனைகளாலும் சருமம் பாதிப்படையாது.
  • ஏபிசி ஜூஸ் ஒரு சக்திவாய்ந்த டிடாக்ஸ் பானமாக செயல்படுவதால், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

ABC ஜூஸ் செய்முறை:

  • ஆப்பிள், பீட்ரூட், கேரட் போன்றவற்றை முதலில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் இவற்றை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதை ஜூஸர் அல்லது பிளெண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • இறுதியில் ஒரு டம்ளரில் வடிகட்டினால் போதும் சுவையான ஏபிசி ஜூஸ் ரெடி. உங்களுக்கு இனிப்புச் சுவை தேவைபட்டால் சர்க்கரையை கலந்துக் கொண்டு பருகலாம்.

மேலும் படிங்க: இளம் பெண்களை குறிவைக்கும் பிசிஓஎஸ்..எச்சரிக்கும் மருத்துவர்கள்!

சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் பெரும்பாலோனர் தேர்வு செய்யும் பானங்களில் ஒன்று தான் இந்த ABC ஜூஸ். குறிப்பாக சமந்தா போன்ற சினிமா பிரபலங்களும் தங்களின் முக அழகைப் பராமரிப்பதற்கு இந்த ஜூஸைத் தான் பருகிறார்கள் என்து குறிப்பிடத்தக்கது.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]