Sunscreen for winter: குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் உபயோகிப்பதால் இத்தனை நன்மைகளா?

குளிர்காலத்தில் அதிக நேரம் வெளியில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் போது சூரிய ஒளிக்கதிர்களால் முகம் கருமையாகும்

sunscreen for skin care

மார்கழியில் மச்சும் குளிரும் என்ற சொலவடைக்கு ஏற்ப தரையில் கால் வைத்தாலே உடல் எல்லாம் ஜில்லுன்னு ஆகுது. அந்தளவிற்கு குளிர் நம்மைவாட்டி வதைக்கிறது. இதனால் சளி, இருமல், தொண்டை கரகரப்பு, காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுப் பாதிப்புகள் மட்டுமில்லை, சருமத்திலும் பல பிரச்சனைகளை இந்த குளிர் நமக்கு வழங்குகிறது.

அதிலும் குளிர்காலத்தில் வெளியில் செல்ல வேண்டிய சூழல் இருக்கும் பெண்களுக்கு சரும பிரச்சனைகள் அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக தோல் கருமையாகுதல், முகம் வறண்டு தோல் உரிதல், உதடு வெடிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்நேரத்தில் தான் சன்ஸ்கிரீனின் உதவியான அளப்பெரியதாக உள்ளது. ஆமாம். சூரிய ஒளியில் இருந்து தப்பிக்க வெயில் காலத்தில் தான் சன்ஸ்கிரீன் உபயோகிப்போம், குளிர்காலத்திலும் உபயோகிக்கலாம்? என்பது பலரது கேள்வியாக அமைகிறது. இதோ ஏன் குளிர்காலத்தில் கட்டாயம் சன்ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும் என்பது குறித்த விபரங்கள் இங்கே…

healthy skin

குளிர்கால சன்ஸ்கிரீன்:

  • ஹைப்பர் பிக்மென்டேஷனை எதிர்த்தல்: குளிர்காலத்தில் அதிக நேரம் வெளியில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் போது சூரிய ஒளிக்கதிர்களால் முகம் கருமையாகும். சருமம் வறண்டு தோல் சொரசொரப்பாக மாறும். சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது இந்த கரும்புள்ளிகளைத் தடுக்கவும், குறைக்கவும் உதவுகிறது.
  • சரும ஆரோக்கியம்: குளிர்காலத்தில் புற ஊதா கதிர்கள் சருமத்தின் செல்களைப் பாதிப்படைய செய்யும். இது சருமத்தில் எரிச்சல் வடுக்களை ஏற்படுத்தும். எனவே குளிர்ந்த சூழலில் வெளியில் சென்றாலும் சன்ஸ்கிரீனை உபயோகிக்கும் போது ஒட்டு மொத்த சருமத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
  • குளிர்காலத்தில் சூரிய ஒளியை குறைவாக இருந்தாலும், அதீத பனி புற ஊதா கதிர்களைப் பிரதிபலிக்கிறது. இந்நேரத்தில் நீங்கள் சன் ஸ்கிரீன் அணிவது சூரிய ஒளியில் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. முகம் மற்றும் கைகள் போன்ற பகுதிகளில், அடிக்கடி வெயிலில் வெளிப்படும் என்பதால் அந்த பாகங்களுக்கு சன்ஸ்கிரீன் தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..
  • ஈரப்பதத்தைத் தக்க வைத்தல்: குளிர்காலத்தில் சருமம் பிரஸ்ஸாக இருக்கும் என்று நினைப்பது தவறு. வெயில்காலத்தை விட குளிர்காற்று தான் சருமத்தை சீக்கிரமே வறண்டு விட செய்கிறது. இதனால் சருமத்தில் எரிச்சல், முகப்பரு, பொலிவின்மை போன்றவை ஏற்படக்கூடும். இந்நேரத்தில் நீங்கள் கூடுதல் மாய்ஸ்சரைசர்களைக் கொண்ட சன்ஸ்கிரீன்களை உபயோகிப்பதால் சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

மேலும் படிக்க:வைட்டமின் டி குறைபாடும். பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும்!

sunscreen for hyperpigmentation

  • முதுமையைத் தடுத்தல்: வெயில் காலமாக இருந்தாலும், குளிர்காலமாக இருந்தாலும் புற ஊதா கதிர்களால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படக்கூடும். எனவே நீங்கள் இளம் வயதிலேயே உங்களது ஏற்படும் முதுமையானத் தோற்றத்தைத் தடுக்க வேண்டும் என்றால், சன்ஸ்கிரீன் உபயோகிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP