herzindagi
Hair care for women

Hair care tips: தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பெண்களே? இத பாலோ பண்ணுங்க!

குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றால், வெங்காய சாறு அல்லது எலுமிச்சை தேய்க்கவும். 
Editorial
Updated:- 2024-01-12, 23:51 IST

“கார் கூந்தல் பெண்ணழகு” என்ற கூற்றிற்கு ஏற்றார் போல் பெண்களின் தலைமுடிக்கு இயற்கையாகவே அவ்வளவு அழகு உண்டு. முக அழகிற்கு கூடுதல் அழகு சேர்ப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கிறது கூந்தல்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த சிறப்பு வாய்ந்த கூந்தலை எப்போதும் அழகாக வைத்திருக்க வேண்டும்  அல்லவா? ஆனால் என்ன அதீத மாசு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பால் தலை முடி உதிர்வு பிரச்சனை அதிகமாகிவிட்டது.

இது போன்ற சூழலில் சருமத்திற்குக் கொடுக்கும் கவனத்தைப் போன்று தலை முடிக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்றவாறு தலைமுடியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அதற்கேற்ற பராமரிப்பு அவசியமான ஒன்று. இல்லையென்றால் அழுக்குபிடித்தும், நாம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு ராசயனங்கள் நிறைந்தும் முடியின் வளர்ச்சியைக் கெடுத்துவிடும். இதோ இன்றைக்கு தலை முடியைப் பராமரிக்கும் முறைகள் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

Hair care for women

மேலும் படிங்க: சரும ஆரோக்கியத்திற்கு உதவும் தர்பூசணி!

தலைமுடி பராமரிப்பிற்கான சிம்பிள் டிப்ஸ்:

  • குளிர் காலம், வெயில் காலம் என எந்த பருவநிலையாக இருந்தாலும் அதற்கேற்ப தலைமுடியைப் பராமரிக்க வேண்டும். முதலில் நீங்கள் முடியின் தன்மைக்கு ஏற்ப சரியான தயாரிப்புகள் கொண்ட பொருள்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 
  • தலை முடியில் படிந்துள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுபிசுவை நீக்க வேண்டும் என்றால்? ஸ்கால்ப் ஸ்கிரிப்பிங் செய்து கொள்ள வேண்டும். உச்சந்தலையின் மேற்படலத்தைப் பிரித்து வேர்கள் வரை அழுத்தி தேய்த்தி ஸ்கர்ப் செய்வதன் மூலம் அழுக்கு, தூசி, எண்ணெய் பிசுபிசு போன்றவை அகற்ற முடியும். 
  • இதற்காக ப்யூட்டி பார்லர்களுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வீடுகளிலேயே நீங்கள் மேற்கொள்ளலாம். தலைமுடியை மென்மையாக்குவதற்கு உதவியாக உதவும்.
  • எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என பல்வேறு சருமத்தின் வகைகளுக்கு ஏற்றவாறு எப்படி அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துகிறோமோ? இது போன்று தான் தலைமுடிக்கும். உங்களது தலைமுடிக்கு ஏற்றவாறு நீங்கள் ஷாம்புகள், எண்ணெய்களை சேர்த்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

trim your hair

  •  உங்களது தலை முடி ஆரோக்கியத்திற்கு தலைமுடியை ஒழுங்கமைக்க வேண்டும். சிலருக்கு அடி முடி இரண்டாக பிரிந்திருக்கும். இதை நீங்கள் முறையாக வெட்ட வேண்டும். இல்லையென்றால் மேல் முடியின் வளர்ச்சியைக் கெடுத்துவிடும். 
  • வாரத்திற்கு ஒரு முறையாவது ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து ஷாம்பு போன்று உபயோகிக்கவும். தலைக்கு குளிர்ச்சியையும்,முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
  • குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றால், வெங்காய சாறு அல்லது எலுமிச்சை தேய்க்கவும். 

 மேலும் படிங்க: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டாப் 5  உணவுகள்? 

இது போன்ற முறைகளை நீங்கள் தொடர்ச்சியான பின்பற்றினாலே தலை முடி வளர்ச்சியில் எவ்வித பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]