herzindagi
winter season

Winter Foods For Pregnancy: குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

<span style="text-align: justify;">நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க வேண்டும் என்றால் கர்ப்ப காலத்தில் கட்டாயம் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.</span>
Editorial
Updated:- 2024-01-13, 17:55 IST

மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக பெண்களுக்கு சாதாரண நாள்களை விட கர்ப்ப காலத்தில் கூடுதல் கவனிப்பு தேவை ஏற்படுகிறது. கருவில் உள்ள குழந்தைகளும்,கர்ப்பிணிகளும் 9 மாத கால முழுவதும் எஎவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், ஊட்டச்சத்துள்ள உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

கர்ப்ப காலத்தில் பெண்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்துக்களை விட கூடுதலாக 300 கலோரிகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களுக்கு உங்களது உணவு முறைகளின் வாயிலாக ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த காலத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதால் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகளின் மூலம் உடல் வலிமையைப் பெற வேண்டும். இதோ கர்ப்ப காலத்தில் பெண்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்? என தெரிந்துக் கொள்ளுங்கள்.

pregnacy food list

குளிர்காலமும், கர்ப்பிணிகளின் உணவு முறைகளும்:

  • தயிர்: கர்ப்ப காலத்தில் குழந்தைகளை வயிற்றில் தாங்கும் அளவிற்கு கர்ப்பிணிகளுக்கு கால்சியம் அதிகளவில் தேவைப்படுகிறது. தயிரில் கால்சியம் மற்றும் எலும்புகளை வலுவாக்கக்கூடிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, பாக்டீரியா தொற்று, வயிற்று வலி, ஈஸ்ட் தொற்றுகளையும் தடுக்கிறது. 
  • முட்டை: கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு உதவுவதால் கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவது கருவிற்கு நல்லது. மேலும், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதால் கர்ப்ப காலத்தில் முட்டைகள் சாலச்சிறந்தது என்றும் சொல்லலாம்.
  • மீன்: கர்ப்பிணிகள் கட்டாயம் மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சால்மன், கானாங்கெளுத்தி, ஒமோகா- 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலுக்கு ஆற்றலையும் வழங்குகிறது.
  • நட்ஸ்: வால்நட்ஸ், பாதாம், முந்திரி மற்றும் பேரீச்சம்பழங்களில்  நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. இவை கர்ப்ப காலத்தில் சிறந்த உணவாக அமைகிறது. அதிக நீர்ச்சத்து கொண்ட பிரஸ்ஸான பழங்களை விட உலர் பழங்களின் ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. 
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு: கருவின் திசுக்களின் சரியான வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ முக்கியமானது. எனவே  வைட்டமின்கள் உள்பட பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

pregnacy women food

  • பச்சை காய்கறிகள்: பீன்ஸ், சிட்ரஸ் பழங்கள், இலைக் காய்கறிகள் போன்றவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளும் போது உடலுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை வளர்ச்சி பாதிப்பையும் தடுக்கவும் பச்சை காய்கறிகள் உதவியாக உள்ளது.
  • புரதம், நார்ச்சத்து, தாதுக்கள், இரும்பு சத்துக்கள் நிறைந்த பருப்பு வகைகளை கர்ப்பிணிகள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க வேண்டும் என்றால் கர்ப்ப காலத்தில் கட்டாயம் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]