herzindagi
mental stress for women health

Health tips: மன ஆரோக்கியம் பாதிப்படைய காரணம் இது தான்!

<span style="text-align: justify;">அலுவலக சூழல், குடும்ப பிரச்சனை போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பான ஒன்றாகிவிட்டது.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-01-17, 22:21 IST

மன அழுத்தம் என்பது நம்மில் பலருக்கு ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. தேவையில்லாமல் ஏதாவது ஒன்றை பற்றி யோசிப்பது அல்லது எதையுமே கண்டுகொள்ளாமல் உணர்ச்சியின்றி இருப்பது அனைத்துமே மன அழுத்தத்திற்குள் வந்துவிடுகிறது. அலுவலக சூழல், குடும்ப பிரச்சனை போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. இதோ மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? இதனால் உடல் நலத்தில் என்னென்ன பாதிப்புகள்? ஏற்படும் என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்...

health tips for women life 

மன அழுத்தம் ஏற்படுவதற்கானக் காரணங்கள்:

  • மன அழுத்தத்திற்கான முதன்மை காரணங்களில் ஒன்று வறுமை. வறுமையில் இருந்தாலும் பலர் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அவர்களும் மனதளவில் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பார்கள் என உளவியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.தங்குவதற்கு இடம் இல்லாத முதல் உணவின்மை, நிதி உறுதியற்ற தன்மை போன்றவற்றால் நமக்கு மன அழுத்தம் ஏற்படும். 
  • பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளால் இருந்தால் அவர்களுக்கான மன அழுத்தம் தேர்வில் மதிப்பெண்கள் குறைவது தான். மதிப்பெண் குறையும் காரணங்களால் பல நேரங்களில் தற்கொலைகள் அரங்கேறுவதை நாம் பார்த்திருப்போம். ஆம் பெற்றோர்களாக இருந்தாலும், மாணவர்களாக இருந்தாலும் கற்றல் குறைபாடுகள் நமக்கு மன அழுத்தத்தைப் பாதிக்கிறது. குறிப்பாக கற்றல் குறைபாடுள்ள மாணவர்களில் 70 சதவீஉள்ள மாணவர்கள், குறிப்பாக, 70 சதவீத கற்றல் குறைபாடு மாணவர்கள் மிகவும் மோசமான மனநல அழுத்தத்திற்கு ஆளாக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றது.
  • நெருங்கிய உறவுகளால் ஏற்படும் சண்டை சச்சரவுகளும் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
  • நாள்பட்ட நோய், உடல் நல பிரச்சனை போன்றவற்றாலும் மக்கள் மன அழுத்த பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
  • மனநல அறிகுறிகளை மோசமாக்குவதில் தனிமை ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. என்ன தான் குடும்பத்துடன் இருந்தாலும், ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் தனிமையில் இருப்பது போன்ற மனநிலையை நாம் அனுபவிக்க நேரிடும். இந்த நிலைமை முற்றிவிடும் போது தான் பல நேரங்களில் நம்மை அறியாமல் தற்கொலை எண்ணம் கூட தோன்றக்கூடும்.

மேலும் படிக்க: எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பயனுள்ள பயிற்சிகள்

இது போன்ற பல காரணங்கள் நம்மை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றன. இதோடு மட்டும் நின்றுவிடவில்லை. பல நேரங்களில் மன அழுத்தம் பல உடல் நல பாதிப்புகளையும் நமக்கு ஏற்படுத்துகிறது.

affect mental stress

 

மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகள்:

  • மன அழுத்தத்தோடு இருக்கும் போது சுவாச பிரச்சனை உடனடியாக ஏற்படும். அதிக படபடப்பு, விரக்தி போன்றவற்றால் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். ரத்த ஓட்டமும் சீராக இருக்காது என்பதால் மூச்சை உள் இழுப்பதற்கு சிரமம் ஏற்படும். குறிப்பாக ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் பெரும் சிரமம் ஏற்படும்.
  • மன அழுத்தம் அதிகரிக்கும் போது, நாளமில்லா அமைப்பு பாதிப்படைவதோடு, உடலில் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கிறது.
  • மன அழுத்தத்தின் போது உணவு பழக்கம் மாறுபடுவதால் வயிற்று வலி, வாந்தி குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சில நேரங்களில் மாதவிடாய் பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.

மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானிய கட்லெட்!

 

 

 

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]