herzindagi
image

குழந்தைகளிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்; பெற்றோர்கள் கட்டாயம் இதை மட்டும் செய்திடுங்க!

குழந்தைகள் தானே என்று அலட்சியப்படுத்தும் போது தான், அவர்கள் அதிகளவில் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது.
Editorial
Updated:- 2025-11-04, 01:41 IST


இன்றைய சூழலில் பெரியவர்களைக் காட்டிலும் மனநல மருத்துவர்களிடம் அதிகளவில் குழந்தைகள் தான் சிகிச்சைக்காக வருவது வேதனையளிக்கிறது. அப்பா, அம்மா போன் கொடுப்பதில்லை, யாருடன் விளையாட அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல பெரியவர்கள் போன்று தன்னால் எதையும் செய்ய முடியவில்லை என்ற விரக்தி போன்ற பல காரணங்களால் குழந்தைகளின் மனநிலையில் பல மாற்றம் ஏற்படுகிறது.

அதிகளவிலான மொபைல் பயன்பாடு, சுற்றுப்புறம் போன்ற பல்வேறு காரணிகளால் இளம் வயதிலேயே மிகவும் தெளிவானவர்கள் பேசுவதும் மன அழுத்தம் ஏற்பட ஒரு காரணியாக அமைகிறது. இவற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளை எப்படி இதிலிருந்து மீட்டுக் கொண்டு வர வேண்டும்? இதற்கு பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

மேலும் படிக்க: குழந்தைகளின் சாக்லேட் ஆசையை மறக்க செய்யணுமா? அப்ப இதை மட்டும் கட்டாயம் செய்திடுங்க!


குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியது:

குழந்தைகள் தானே அவர்களுக்கு என்ன தெரியும்? என்று யோசிப்பதை முதலில் நிறுத்திவிட வேண்டும். பெரியவர்களைப் போன்று அவர்களுக்கும் மனது உள்ளது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். எனவே அவர்களிடம் எப்போதும் நண்பர்களைப் போன்று பேச வேண்டும். குறிப்பாக இன்றைக்கு பள்ளியில் என்ன செய்தீர்கள் என்று ஆரம்பித்து? என்னென்ன பேசினீர்கள்? என்பது போன்ற கேள்விகளைக் கொஞ்சம் விளையாட்டுத்தனமாக கேட்டுப்பாருங்கள். மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிடுவார்கள். ஒருவேளை ஆசிரியரே திட்டி இருந்தாலும், நண்பர்களுடன் சண்டை போட்டிருப்பதைக் கூறினாலும் அவர்களுக்கு அறிவுரை வழங்கவும். நம்முடைய பிரச்சனைக் கேட்பதற்குப் பெற்றோர்கள் உடன் இருக்கிறார்கள் என்பதை முதலில் புரிய வைப்பதற்கு இப்படி பேசினாலே போதும்.

மேலும் படிக்க: பதின்பருவ பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவை மேம்படுத்த 7 எளிய வழிமுறைகள்

 

 

  • மனநிலையை எப்போது சீராக வைத்திருப்பதற்கு அவர்களை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். ஒருவேளை பள்ளியில் தீடிரென பங்களிப்பு குறைதல், வழத்திற்கு மாறாக மனநிலை மாற்றம், தூங்குவதில் சிரமம், அடிக்கடி உடலில் ஏற்படும் வலி , பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்தல் போன்ற பலவற்றை எப்போதும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.
  • அதிகப்படியான டிவி பார்ப்பது, மொபைல் பார்ப்பது, கேம் விளையாடுவது போன்றவற்றால் கவனச் சிதறல் மற்றும் தூக்கமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே இதைத் தவிர்ப்பது நல்லது.
  • வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்பட்டால் எப்படி கையாள்வது? ஒருவேளை தவறு செய்திருந்தால் எப்படி மன்னிப்பு கேட்பது? ஒரு உதவி செய்தால் நன்றி கூறுவது போன்ற அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொடுக்கவும்.

 Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]