herzindagi
image

சவால்களைத் தாண்டி குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? பெற்றோர்கள் இதை மட்டும் செய்யுங்க!

குழந்தைகள் தங்களது வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் பின்னரும் கட்டாயம் பெற்றோர்கள் ஒரு ஊன்றுகோலாக இருக்க வேண்டும்.
Editorial
Updated:- 2025-11-11, 16:12 IST

இன்றைய காலத்துக் குழந்தைகள் அனைவருக்கும் ஏதாவது ஒரு அசாத்திய திறமையுடன் பிறக்கிறார்கள். இவர்களுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீடு மற்றும் வீட்டைச் சுற்றியிருக்கும் இடங்களில் என்ன நடக்கிறது? என்பதை அறிந்துக் கொண்டே அவர்கள் செயல்படுகிறார்கள். இந்த நேரத்தில் உங்களது குழந்தைகளை மேலும் திறமையையும், எத்தனை தோல்விகள் மற்றும் சவால்கள் வந்தாலும், அதை அனைத்தையும் பொருட்படுத்தாமல் இளம் வயதிலேயே வெற்றிக்கான வழிமுறைகளை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் தலையாய கடமைகளில் ஒன்று. இதோ எப்படி குழந்தைகளை வெற்றியாளராக மாற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்? என்பது குறித்த வழிகாட்டுத் தகவல்கள் இங்கே.

மேலும் படிக்க: குழந்தைப் பிறந்தவுடன்  பணிக்குச் செல்லும் பெண்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!

குழந்தைகளை வெற்றியாளராக மாற்றுவதற்கான வழிமுறைகள்:

மகிழ்ச்சியுடன் வைத்திருத்தல்:

குழந்தைகளுக்கு சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் சூழல்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்காக அவர்களின் எதையும் திணிக்கக்கூடாது. மாறாக குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான சூழல்களை அமைத்துக் கொடுக்கவும். குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய முயற்சி செய்வதோடு அவர்களுடன் எப்போதும் சிறு குழந்தைகள் போன்று விளையாடுங்கள். மகிழ்ச்சியான மனநிலையே அவர்களை எப்போதும் தைரியத்துடன் செயல்பட உதவும். வாழ்க்கையில் எதையும் சாதிக்க வேண்டும் என்ற மனப்பக்குவத்தையும் ஏற்படுத்தும்.

மேலும் படிக்க: பெண் குழந்தைகளை இப்படி வளர்த்துப்பாருங்கள். நிச்சயம் தைரியமாக இருப்பார்கள்!


உற்சாகப்படுத்துங்கள்:

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதோடு அவர்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும் உற்சாகப்படுத்த முயற்சி செய்யுங்கள். குழந்தைகளுக்கு கல்வி பற்றி நன்கு உணர்ந்து, படிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்கள் என்ன செய்தாலும் பாராட்ட முயற்சி செய்யுங்கள். குழந்தைகளின் சின்ன சின்ன முயற்சிகளைப் பாராட்டுவதன் மூலம் படிப்பிலும், அவர்களிடம் உள்ள திறமையிலும் ஆர்வம் காட்டுவார்கள்.

கடுமையாக அடிக்காதீர்கள்:

குழந்தைகள் சேட்டைகள் செய்தால் அவர்களை அடித்து வளர்க்கலாம். அதற்காக கடுமையான தாக்குதல்கள் தேவையில்லை. கொஞ்சம் அமைதியாக சொல்லிக்கொடுக்க முயற்சி செய்யுங்கள். ஏன் சொன்ன வேலையைச் செய்யவில்லை? ஒருவேளை மற்றவர்களிடம் மரியாதையாக நடக்கவில்லையென்றால் வாழ்க்கையில் என்ன கஷ்டங்களையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பது குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கவும். அடித்துச் சொல்வதை விட அமைதியான வழியில் சொன்னாலே எவ்வித தயக்கமும், பயமும் இன்றி தெரியாத விஷயங்களை நம்மிடம் கேட்பார்கள்.

மேலும் படிக்க: வெள்ளி கொலுசுக்குள் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?

 

கற்றலை உறுதி செய்தல்:

வாழ்க்கையில் கல்வி எந்தளவிற்கு முக்கியம் என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்கவும். பள்ளி முடிந்து வீடு திரும்பினாலும் எந்த நேரத்தில் படிக்க வேண்டும், விளையாட வேண்டும் என நேரத்தை ஒதுக்கச் சொல்லவும். கட்டாயம் குறிப்பிட்ட நேரத்தில் படிக்க வேண்டும் என்பதை ஆணித்தனமாக அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]